உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை: முதல்வர் உறுதி

ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை: முதல்வர் உறுதி

மைசூரு : ''கர்நாடகாவில் நடத்தப்பட்ட சமூக, பொருளாதார, கல்வி கணக்கெடுப்பின் கமிஷன் அறிக்கையை விரைவில் செயல்படுத்துவேன்,'' என முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:நான் முதன் முறையாக முதல்வரான போது, சமூக, பொருளாதார, கல்வி கணக்கெடுப்பு நடத்த, காந்தராஜா கமிஷனை அமைத்தேன். அந்த அறிக்கை வெளியாவதற்கு முன், அதிகாரம் இழந்தோம்.தொடர்ந்து வந்த அரசுகள், அதை செயல்படுத்தவில்லை. இம்முறை மீண்டும் நான் முதல்வராக பதவியேற்ற பின், பிற்படுத்தப்பட்டோர் தலைவராக இருந்த ஜெயபிரகாஷ் ஹெக்டே, என்னிடம் அறிக்கை சமர்ப்பித்து உள்ளார். இதை, அமைச்சரவையில் வைத்து ஒப்புதல் பெறுவேன். இந்த அறிக்கையை கண்டிப்பாக செயல்படுத்துவேன்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ