உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜாதிவாரி கணக்கெடுப்பு

ஜாதிவாரி கணக்கெடுப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: பீஹாரில் ஜாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்ட பின், 'நாடு முழுதும் ஜாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும்' என, காங்., முன்னாள் தலைவர் ராகுல் சொல்லி வருகிறார்.ஐந்து மாநில சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் மட்டுமன்றி, 'வரும், 2024ல் காங்., ஆட்சிக்கு வந்தால், ஜாதிவாரி கணக்கெடுப்பு நிச்சயம் நடத்தப்படும்' என, உறுதிமொழி அளித்துள்ளார்.ஆனால், காங்., ஆட்சியில் உள்ள கர்நாடகாவில் இந்த விவகாரம் மிகப் பெரிய பிரச்னையை ஏற்படுத்தி உள்ளது. 2015ல் இங்கு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது; ஆனால், கர்நாடக அரசு இந்த கணக்கெடுப்பின் முடிவுகளை, இதுவரை வெளியிடவில்லை. இந்த அறிக்கையின் சில பகுதிகள் தற்போது வெளியே கசிந்து விட்டன.கர்நாடகாவில் எந்த கட்சி ஜெயிக்கும் என்பதை, லிங்காயத் மற்றும் வோக்கலிக ஜாதி வாக்குகள் தீர்மானிக்கின்றன. மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 17 சதவீதம், 14 சதவீதம் இருந்த இரண்டு ஜாதியினரும், 2015 கணக்கெடுப்பின்படி, 10 சதவீதமாக குறைந்து விட்டதாக வெளியே கசிந்த அறிக்கை சொல்கிறதாம்.இதனால், இந்த இரண்டு பிரிவினரும், 'புதிதாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்' என, கோரிக்கை விடுத்துள்ளனர். துணை முதல்வர் சிவகுமார், வோக்கலிக வகுப்பைச் சார்ந்தவர்; இவரும், 'புதிய ஜாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும்; 2015ல் எடுத்த கணக்கெடுப்பை அரசு நிராகரிக்க வேண்டும்' என, முதல்வர் சித்தராமையாவிற்கு கடிதம் எழுதியுள்ளார்.இவர்கள் இரண்டு பேரும், அரசியல் எதிரிகள் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த கடிதத்தில் தேவகவுடா மற்றும் பல பா.ஜ., தலைவர்களும் கையெழுத்திட்டு உள்ளனர்.கடந்த, 2015ல் எடுத்த கணக்கெடுப்பு முடிவுகள் வெளியானால், இந்த இரண்டு பிரிவினரிடமிருந்தும் பெரும் பிரச்னைகள் வரும் என, சித்தராமையா அஞ்சுகிறார்.அதனால், முடிவுகளை வெளியிடாமல் மவுனம் சாதித்து வருகிறார். இவருடைய அமைச்சரவையில் உள்ள, 34 அமைச்சர்களில் எட்டு பேர் லிங்காயத்; ஐந்து பேர் வோக்கலிக வகுப்பினர். சித்தராமையா குருபா வகுப்பைச் சார்ந்தவர். காங்., தலைமை ஜாதிவாரி கணக்கெடுப்பை வற்புறுத்த, கர்நாடக காங்., அரசோ என்ன செய்வது என, தெரியாமல் திண்டாடி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை