உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கெஜ்ரிவாலை 3 நாள் காவலில் விசாரிக்க சி.பி.ஐ.,க்கு அனுமதி

கெஜ்ரிவாலை 3 நாள் காவலில் விசாரிக்க சி.பி.ஐ.,க்கு அனுமதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : மதுபான கொள்கை ஊழல் வழக்கில் நேற்று சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்ட டில்லி முதல்வர் கெஜ்ரிவால் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 3 நாள் சி.பி.ஐ.,காவலில் விசாரிக்க கோர்ட் அனுமதி வழங்கியது.மதுபான கொள்கை ஊழல் தொடர்பான பண மோசடி வழக்கில், டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த மார்ச் 21ல் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட ஜாமின் உத்தரவுக்கு எதிராக டில்லி உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இந்நிலையில் மதுபான கொள்கை வழக்கினை விசாரித்து வரும் மற்றொரு அமைப்பான சி.பி.ஐ., நேற்று கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்தியது. தொடர்ந்து நேற்று இரவு அவரை திகார் சிறையிலேயே வைத்து கைது செய்தது. இன்று ரோஸ் அவென்யூ கோர்ட்டில் கெஜ்ரிவால் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை சி.பி.ஐ., காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மனு செய்தது. மனுவை விசாரித்த நீதிபதி 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்