எரிசக்தி கட்டமைப்புகள் மீதான தாக்குதல் நிறுத்தம்
வாஷிங்டன்: ரஷ்யா – உக்ரைன் இடையே எரிசக்தி கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை உடனடியாக நிறுத்த இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷ்யா – உக்ரைன் இடையிலான போரில் இரு நாடுகளும் எரிசக்தி கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வந்தன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் நிலையில், இரு நாடுகள் இடையே உடனடியாக எரிசக்தி கட்டமைப்புகள் மீதான தாக்குதல் நிறுத்தம் அமலுக்கு வந்ததாகவும், அதற்கு ரஷ்யா – உக்ரைன் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று அறிவித்தார். எனினும், இந்த ஒப்பந்தத்தை ரஷ்யாவும் உக்ரைனும் உடனடியாக உறுதிப்படுத்தவில்லை. முன்னதாக, ‘ரஷ்யா தாக்குதல்களை நிறுத்தினால், அந்நாட்டு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தாக்குதல்களை நிறுத்த தயார்’ என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியிருந்தார்.