உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 4 நாட்களாக நீடித்த மோதல் முடிவுக்கு வந்தது எப்படி?

4 நாட்களாக நீடித்த மோதல் முடிவுக்கு வந்தது எப்படி?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்தியா - பாகிஸ்தான் இடையே கடந்த நான்கு நாட்களாக நடந்து வந்த மோதல் நேற்று மாலை முடிவுக்கு வந்ததன் பின்னணியில் உள்ள தகவல்கள் வெளியாகி உள்ளன.நான்கு நாட்களாக தொடர்ந்த இந்தியா - பாகிஸ்தான் மோதல், மேலும் தீவிரமாகும் என்பதற்கான அறிகுறிகள் தென்பட்ட நிலையில், திடீரென இரு தரப்பும் சண்டையை நிறுத்திக்கொள்ள சம்மதித்தன. எதிர்பாராத இந்த திருப்பத்தை அதிபர் டிரம்ப் முதல் நபராக உலகுக்கு அறிவித்தார். இருப்பினும் நேற்று இரவு பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்தியா பதிலடி கொடுத்தது.இது தொடர்பாக வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி கூறுகையில், போர் நிறுத்தத்தை பாகிஸ்தான் மீறியுள்ளது. இந்த அத்துமீறலை இந்தியா தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது. இதற்கு கடுமையான பதிலடி கொடுக்க முப்படைகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டு உள்ளது எனத் தெரிவித்தார்.இந்நிலையில் போர் நிறுத்தம் எப்படி ஏற்பட்டது என்பது குறித்து ஆங்கில மீடியாக்களில் தகவல் வெளியாகி உள்ளது.அரசு வட்டாரங்கள் தெரிவித்ததாக அந்த செய்தியில் கூறப்பட்டு உள்ளதாவது: 1. நேற்று காலை இந்திய விமானப்படை விமானங்கள் மூலம் பிரம்மோஸ் - ஏ( வானில் இருந்து தாக்கும் திறன் கொண்டது) ஏவுகணையை பாகிஸ்தான் விமானப்படை தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் ராவல்பிண்டியில் உள்ள சக்லாலா, பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சர்கோதா தளங்கள் சேதம் அடைந்தன. மேலும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஜகோபாபாத், போலாரி, ஸ்கார்டு தளங்களும் சேதம் அடைந்தது உளவுத்துறை தகவல்கள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.2. அடுத்ததாக பாகிஸ்தானின் முக்கிய இடங்களை குறிவைத்து கடுமையான தாக்குதலை நடத்த இந்தியா திட்டமிட்டு வருவதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் நம்ப துவங்கினர். இதனை இந்திய உளவுத்துறையினர் கண்டறிந்தனர். 3. இதனால் அடுத்து என்ன நடக்குமோ என்ற பயத்தில் இருந்த பாகிஸ்தான் அரசு உடனடியாக அமெரிக்காவின் உதவியை நாடியது. இந்த விவகாரத்தில் தலையிட்டு அமைதியை கொண்டு வரும்படி கெஞ்ச துவங்கியது. ஏற்கனவே, இந்த விவகாரத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அதிகாரிகளுடன் அமெரிக்கஅரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.4. பொது மக்கள் மத்தியில் நடுநிலை வகிப்பதாக காட்டிக் கொண்ட அமெரிக்கா, இந்த விவகாரத்தில் தலையிட்டு, பாகிஸ்தானுக்கு கடுமையான செய்தியை அனுப்பியது. இதில், டிஜிஎம்ஓ மூலம் இந்தியாவை தொடர்பு கொண்டு பதற்றத்தை தணிக்கும்படி உடனடியாக அறிவுறுத்தப்பட்டது. இந்தியாவை நேரடியாக தொடர்பு கொண்டு பேசும்படி பாகிஸ்தானுக்கு அமெரிக்கா உத்தரவிட்டது.5. பாகிஸ்தான் நடத்திய அனைத்து தாக்குதல்களையும் இந்தியா வெற்றிகரமாக முறியடித்த நிலையில் அடுத்து செய்வது அறியாது தவித்த பாகிஸ்தானின் டிஜிஎம்ஓ கஷிப் அப்துல்லா நேற்று மாலை இந்தியா ஜிடிஎம்ஓ., லெப்டினன்ட் ஜெனரல் ராஜிவ் கயுவை மாலை 3:35 மணிக்கு தொடர்பு கொண்டு பேசினார்.6. பாகிஸ்தான் அதிகாரிகள் கெஞ்சியதை தொடர்ந்தே போர் நிறுத்தத்திற்கு இந்தியா ஒப்புக்கொண்டது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

ஸ்ரீனிவாசன் ராமஸ்வாமி
மே 11, 2025 20:30

நம் தரப்பில் தரும் பாடம் அவர்கள் இனி கனவில் கூட நம் நாட்டினுள் பயங்கரவாத நடவடிக்கை பற்றி நினைக்க கூடாது.


ஆரூர் ரங்
மே 11, 2025 18:31

தொடர்ந்து அடிப்பதற்கு பதிலாக தெளியவச்சு தெளியவச்சு அடிக்கிறதுதான் சூப்பர். இப்போ விட்டிருக்கிறது சின்ன இன்டர்வெல்.


தர்மராஜ் தங்கரத்தினம்
மே 11, 2025 18:14

அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவோம் என உதார் விடவேண்டியது ..... பிறகு உயிர்ப்பிச்சை கேட்க வேண்டியது ..... எங்க கிம்ச்சை மன்னர் ஊர்வலம் நடத்தியதே காரணம் ..... படுத்தே விட்டானய்யா மொமெண்ட் .....


என்றும் இந்தியன்
மே 11, 2025 18:01

இந்த நிறுத்தம் தற்காலிகமானது இன்னும் 7நாட்கள் கழித்து இன்னுமொரு தாக்குதல் இந்தியா நடத்தவேண்டும்.பாகிஸ்தான் கொஞ்சம் ஏமாற்றினாலும் உடனே பயங்கரமாக பதிலடி கொடுக்கவேண்டும். அடுத்த 5 வருடத்திற்கு பாக்கிஸ்தான் எழுந்திருக்க முடியாத அளவுக்கு பதிலடிகொடுக்கவேண்டும். அப்போது தான் பாகிஸ்தான் யோசிக்கும் அனாவசிய போரிலியிடுபடுவதில்


என்றும் இந்தியன்
மே 11, 2025 18:01

இந்த நிறுத்தம் தற்காலிகமானது இன்னும் 7நாட்கள் கழித்து இன்னுமொரு தாக்குதல் இந்தியா நடத்தவேண்டும்.பாகிஸ்தான் கொஞ்சம் ஏமாற்றினாலும் உடனே பயங்கரமாக பதிலடி கொடுக்கவேண்டும். அடுத்த 5 வருடத்திற்கு பாக்கிஸ்தான் எழுந்திருக்க முடியாத அளவுக்கு பதிலடிகொடுக்கவேண்டும். அப்போது தான் பாகிஸ்தான் யோசிக்கும் அனாவசிய போரிலியிடுபடுவதில்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை