மேலும் செய்திகள்
ஐந்து வங்கதேசத்தினர் ஜஹாங்கிர்புரியில் கைது
09-Apr-2025
இம்பால் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் எதிரொலியாக மணிப்பூரில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வங்கதேசத்தினரை கண்டறியும் பணியை, அம்மாநில போலீசார் மேற்கொண்டுள்ளனர்.வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இடஒதுக்கீடு தொடர்பாக மெய்டி - கூகி சமூகத்தினருக்கு இடையே, 2023ல் மோதல் ஏற்பட்டது. இது, கலவரமாக மாறி ஒன்றரை ஆண்டுகளாக நீடித்தது. இதில், 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மத்திய, மாநில அரசின் அதிரடி நடவடிக்கைகளால், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நிலைமை கட்டுக்குள் வந்தது.எனினும், ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள் நடத்தி வரும் தாக்குதல்களால், அவ்வப்போது ஒருசில வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதற்கிடையே, வங்கதேச கிளர்ச்சியாளர்கள் சட்டவிரோதமாக நம் நாட்டு எல்லைக்குள் ஊடுருவியதே, மணிப்பூரில் இதுபோன்ற தாக்குதல் சம்பவங்களுக்கு காரணம் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.இதைத்தொடர்ந்து, வங்கதேச எல்லைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதுடன், கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுஉள்ளது. இதற்கிடையே, ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் எதிரொலியாக, மணிப்பூர் முழுதும் உஷார் படுத்தப்பட்டுள்ளது.மணிப்பூரின் லீலாங்க், மினுட்டோங், வஹாட்டா, மயாங்க் இம்பால், சோரா, கைராங் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வங்கதேசத்தினரோ அல்லது பாகிஸ்தானியரோ எவ்வித ஆவணங்களும் இன்றி சட்டவிரோதமாக தங்கியுள்ளனரா என்பது குறித்து போலீசார் தீவிர ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.சட்டவிரோதமாக தங்கியிருப்பது கண்டறியப் பட்டால் உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, போலீசார் தெரிவித்துள்ளனர்.
09-Apr-2025