உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லி மேம்பாட்டுக்கு ரூ.821 கோடி சிறப்பு நிதி ஒதுக்கியது மத்திய அரசு

டில்லி மேம்பாட்டுக்கு ரூ.821 கோடி சிறப்பு நிதி ஒதுக்கியது மத்திய அரசு

புதுடில்லி:தேசிய தலைநகர் பிராந்திய உள்கட்டமைப்பை மேம்படுத்த, 821.26 கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கியுள்ள மத்திய அரசுக்கு, முதல்வர் ரேகா குப்தா நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து, முதல்வர் ரேகா குப்தா கூறியதாவது: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, இம்மாத துவக்கத்தில் சந்தித்தேன். அப்போது, தேசிய தலைநகர் பிராந்தியத்தில் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் திட்டங்களுக்கு நிதியுதவி கேட்டு கோரிக்கை விடுத்தேன். பரிசீலிப்பதாக கூறினார். இந்நிலையில், டில்லியின் உள்கட்டமைப்பை மேம்படுத்த 821.26 கோடி ரூபாய் சிறப்பு நிதியை, மத்திய நிதி அமைச்சகம் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் இந்த உதவிக்காக, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சுகாதாரம், கல்வி, போக்குவரத்து, குடிநீர், வீட்டுவசதி, எரிசக்தி மற்றும் எம்.ஆர்.டி.எஸ்., ரயில் நான்காம் கட்ட திட்டம் ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்படும். அரசின் லட்சியமான, 'வளர்ந்த டில்லி' யை உருவாக்கும் திட்டத்துக்கு மத்திய அரசின் சிறப்பு நிதி பேருதவியாக இருக்கும். இந்த நிதியைப் பயன்படுத்தி வளர்ச்சித் திட்டங்களை சரியான நேரத்தில், வெளிப்படையாக நிறைவேற்றுவோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை