உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விவசாயிகளுக்கு கவச உடை: மத்திய அரசு அறிமுகம்

விவசாயிகளுக்கு கவச உடை: மத்திய அரசு அறிமுகம்

புதுடில்லி :வயலில் பூச்சிக்கொல்லி தெளிக்கும் போது விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் கவச உடையினை, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஜிதேந்திர சிங் டில்லியில் நேற்று அறிமுகப்படுத்தினார்.வயலில் பூச்சிக்கொல்லி தெளிக்கும்போது விவசாயிகளுக்கு மூச்சு திணறல், கண் பார்வை கோளாறு போன்ற தீவிர பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதை தடுப்பதற்காக உயிரி தொழில்நுட்ப துறையின் கீழ் பெங்களூரில் இயங்கும் பிரிக் - இன்ஸ்டெம் நிறுவனமும், மற்றொரு தனியார் நிறுவனமும் இணைந்து விவசாயிகளுக்கான கவச உடையை தயாரித்துள்ளன. இலகுவான இந்த உடையை அணிந்து வயலில் மருந்து தெளிப்பது எளிதாக இருக்கும் என, தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. துவைத்து அணியும் வகையிலான இந்த பாதுகாப்பு உடையின் விலை 4,000 ரூபாய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Subash BV
டிச 19, 2024 18:31

What happened to drones technology. USE IT EFFICIENTLY. HUMAN LIVES PRECIOUS. SAVE IT.


N narayanasamy N naraysnasamy
டிச 19, 2024 09:52

விவசாயி உதவுகிறோம் என்ற பெயரில் நிறைய கம்பெனிகள் வியசாயிகளை மொட்டை அடித்துக்கொண்டுஇருக்கின்றன விளைகின்ற காசுகளையெல்லாம் கடைசியில் கடன் சுமையால் தற்கொலை செய்து கொள்கிறான்.


N narayanasamy N naraysnasamy
டிச 19, 2024 09:36

விவசாயிகளை மொட்டை அடிக்க இது போன்ற கண்டு பிடிப்புகளை கண்டுபிடித்து கொள்ளை அடிக்க கார்பரேட்டுகள் போடும் பிளான்கள் தான் இது. ஏன் இவரை அரசு இலவசமாக கொடுக்கக்கூடாது.? .


NVM NVM
டிச 19, 2024 04:56

இதுதேவையற்றசெயல்


அப்பாவி
டிச 18, 2024 12:38

கண்ணீர்புகை குண்டுகளை தாக்குபுடிக்குமா?


Sampath Kumar
டிச 18, 2024 08:21

ஓஹோ இது தான் பிரச்சனையை மூடி மறைப்பது என்பதா ?? பிஜேபி அரசின் ஏமாற்று வேலைகளையில் இதுவும் ஓன்று


Pats, Kongunadu, Bharat, Hindustan
டிச 18, 2024 07:12

அதானே? நீங்க போயி ஒவ்வொரு செடியா பாத்து, ஒவ்வொரு பூச்சியா பிடிச்சு டப்பால போட்டு கோழிக்கு உணவா கொடுத்திடுங்க. பிரச்சனை தீர்ந்தது.


Karthik
டிச 18, 2024 07:06

விவசாயிகளுக்கு எனும்போது இதனை மானிய விலையில் ரூ1000 குள் கொடுக்க முன்வந்தால் உண்மையில் இது விவசாயிகளுக்கு பயணிக்கும்.


Barakat Ali
டிச 18, 2024 10:55

விவசாயிகள் என்றாலே ஏழைகள்.. தொழிலதிபர்கள் என்றாலே தொழிலாளிகளின் உழைப்பைச் சுரண்டிப் பணம் கொழிக்கும் முதலைகள் என்கிற எண்ணம் தமிழ்நாட்டில் நன்கு வேரூன்றிவிட்டது ......


Sambath
டிச 18, 2024 06:41

இந்த பூச்சி கொல்லிகளை உண்ணும் மக்களின் நிலை??


சம்பா
டிச 18, 2024 04:48

நல்லது பாம்பு கடி க்கும் ஏதாவது பண்ணுங்க இல்ல பிடிக்க அனுமதி


சமீபத்திய செய்தி