உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வேறுபட்ட கட்டண நிர்ணயம்: உபெர், ஓலாவுக்கு மத்திய அரசு நோட்டீஸ்

வேறுபட்ட கட்டண நிர்ணயம்: உபெர், ஓலாவுக்கு மத்திய அரசு நோட்டீஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சவாரி செய்வதற்கு முன்பதிவு செய்யும்போது, ஆண்டிராய்டு போன்களில் ஒரு கட்டணமும், ஐபோன்களில் ஒரு கட்டணமும் நிர்ணயம் செய்தது தொடர்பாக, உபெர், ஓலா நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளது.டாக்ஸி ஓருங்கிணைப்பாளர்களாக இருக்கும் உபெர் மற்றும் ஓலா நிறுவனங்கள், வாடிக்கையாளர்களுக்கு போக்குவரத்து சேவை வழங்கி வருகிறது. இந்த சேவையை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள் தங்களின் ஐபோன் அல்லது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களுக்கு வெவ்வேறு கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து, இந்த புகார்கள் குறித்து மத்திய அரசின் கவனத்திற்கு வந்தது. இதனையடுத்து மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் நடவடிக்கை எடுத்தது.இது குறித்து மத்திய நுகர்வோர் விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது:வாடிக்கையாளர்களின் ஐபோன் அல்லது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களில் பதிவு செய்வதில் வெவ்வேறு கட்டணங்கள் வசூலிக்கப்படும் புகாரின் அடிப்படையில், நடவடிக்கை எடுக்கப்படுகிறது.அந்த நிறுவனங்களின் கட்டண அறிக்கைகள் தொடர்பாக, உபெர், ஓலா நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு, அமைச்சகம் இன்று நோட்டீஸ் அனுப்பி உள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

vadivelu
ஜன 23, 2025 22:10

ஓலா பயணிகளின் குறைகளை பகிர ஒரு அழியும் செய்ய இல்லை. ஓட்டுனரிடம் இரு முறை ஜீபே செய்து விட்டால் அதை திருப்ப பெற வழி இல்லை. ஆனால் ஊபரில் இருக்கிறது.


Srinivasan Ramabhadran
ஜன 23, 2025 21:04

இதே போன்று வேறு சில ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் கூட, ஆன்லைனில் பொருட்கள் ஆர்டர் செய்யும் போது ஆன்ட்ராய்டு போன் மூலம் ஆர்டர் செய்தால் ஒரு விலையும், ஐ போன் மூலம் ஆர்டர் செய்தால் அதிகப்படியான விலையும் வசூலிக்கிறார்கள். மத்திய/ மாநில அரசுகள் இதையும் கருத்தில் கொண்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Anantharaman Srinivasan
ஜன 23, 2025 18:13

அதேபோல் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம், தமிழ்நாட்டில் Auto டிரைவர்கள் book பண்ணியபின் ola or uber fix பண்ணிகொடுக்கும் தொகைக்கு மேல் அதிகமாக 50 முதல் 100 ரூபாய் வரை கேட்பதையும் விசாரித்து நடவடிக்கை எடுக்க Ola /Uber க்கு அறிவுரை வழங்க வேண்டும். Auto drivers demanded more என்று தகவல் கொடுத்தாலும் Ola / Uber நிர்வாகம் கண்டு கொள்வதில்லை.


Ram
ஜன 23, 2025 17:00

ஒரு மாதமாக தனிச்சிய்யாக ஓலா & உபேர் நடந்து வருகிறது .


Columbus
ஜன 23, 2025 16:09

This is Artificial Intelligence.