உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மத்திய அரசு வேலை ஆரம்ப சம்பளம் ரூ.51,480

மத்திய அரசு வேலை ஆரம்ப சம்பளம் ரூ.51,480

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை திருத்தும் வகையில், எட்டாவது சம்பள கமிஷனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அடிப்படை ஊதியம் மூன்று மடங்கு உயர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பில் மத்திய அரசு ஊழியர்கள் உள்ளனர். அவ்வாறு வழங்கப்பட்டால், மத்திய அரசு வேலைகளில் ஆரம்ப சம்பளம், 51,480 ரூபாயாக உயரும்.மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதிய விகிதம், 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்படுகிறது.

ஒப்புதல்

இதற்காக சம்பளக் கமிஷன் அமைக்கப்படுகிறது. கடந்த, 2016ல் ஏழாவது சம்பளக் கமிஷன் அறிவிக்கப்பட்டது. இந்த கமிஷனின் பதவிக்காலம், இந்தாண்டு டிச., 31ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, 2026 ஜன., 1 முதல் புதிய ஊதியம் மற்றும் ஓய்வூதியங்களை வழங்கும் வகையில், எட்டாவது சம்பளக் கமிஷனை அமைக்கும்படி, மத்திய அரசு ஊழியர்கள் சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.இந்நிலையில், எட்டாவது சம்பளக் கமிஷனை அமைப்பதற்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், எந்த தேதியில் இருந்து இந்த கமிஷன் செயல்படும் என்பது அறிவிக்கப்படவில்லை.தற்போதைய சம்பளக் கமிஷனின் பதவிக் காலம் இந்தாண்டு இறுதியுடன் முடிவடைவதால், எட்டாவது கமிஷனின் பதவிக் காலம், 2026 ஜன., 1 முதல் துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

50 லட்சம் பேர்

மத்திய அரசின் இந்த அறிவிப்பால், ராணுவத்தினர் உட்பட, 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள், 65 லட்சம் ஓய்வூதியதாரர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் மாற உள்ளது. இதைத் தவிர, டில்லியில் பணியாற்றும் ராணுவத்தினர் மற்றும் டில்லி அரசு ஊழியர்கள் நான்கு லட்சம் பேருக்கும் சம்பளம் மாற உள்ளது.கமிஷன் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் விரைவில் நியமிக்கப்படுவர்,'' என, மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.ஏழாவது சம்பளக் கமிஷனின்போது, 3.67 'பிட்பென்ட் பேக்டர்' எனப்படும் சம்பளத்தை நிர்ணயிக்கும் பெருக்கல் காரணியை ஊழியர் சங்கங்கள் கோரின. ஆனால், 2.57 மடங்கு வழங்கப்பட்டது. அதாவது, அடிப்படை சம்பளம், 2.57 மடங்கு உயர்ந்தது. அதன்படி, 7,000 ரூபாயாக இருந்த அடிப்படை சம்பளம், 18 ஆயிரம் ரூபாயாக உயர்ந்தது. அதுபோல ஓய்வூதியமும், 3,500 ரூபாயில் இருந்து, 9,000 ரூபாயாக உயர்ந்தது. அதிகபட்ச சம்பளம், 2.50 லட்சம் ரூபாயாகவும், அதிகபட்ச ஓய்வூதியம், 1.25 லட்சம் ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டது.தற்போது குறைந்தபட்சம் 2.86 பிட்மென்ட் பேக்டர் அளவுக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதை மத்திய அரசு ஏற்றுக் கொண்டால், சம்பளம் 186 சதவீதம் அதிகரிக்கும். இதன்படி, மத்திய அரசு வேலைகளில் குறைந்தபட்ச சம்பளம், 18 ஆயிரம் ரூபாயில் இருந்து, 51,480 ரூபாயாக உயரும்.- நமது சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

ramesh
ஜன 17, 2025 19:20

ஏழை எளிய மக்களிடம் கட்டாய வரி வசூலித்து அரசு ஊழியர்களுக்கு பலமடங்கு ஊதியம் . வரிகொடுப்பவன் மேலும் மேலும் ஏழை ஆகிறான் .ஆனால் அந்த ஏழைகளின் வரிப்பணத்தில் அரசு ஊழியர் மேலும் மேலும் பணக்காரர்கள் ஆகிறார்கள் .நல்ல பொருளாதார வளர்ச்சி


A Venkatachalam
ஜன 17, 2025 12:34

கொடுக்கிற சம்பளமே போதும். இந்தியாவில் அணைத்து பொதுத்துறை யிலும் ஒப்பந்த முறையில் குறைந்த சம்பளத்தில் வேலை செய்கிறார்கள். நிரந்தர பணியாளர்களை வேலைக்கு எடுத்தாள் அடித்தட்டு மக்கள் பயன் பெறுவார்கள்.


Sivagiri
ஜன 17, 2025 12:23

ஆக, ஆக , அரிசி விலை மூணு மடங்கு உயரபோகுது . . . கிலோ முந்நூறுக்கு மேல் போக போகுது , . . வாடகை , கரண்ட் பில் , முறைவாசல் , போன் பில் , கேஸ் , கேபிள் டிவி , ஸ்கூல் பீஸ் , இதெல்லாம் போக மிச்சம் இருந்தால் அரிசி வாங்கி சாப்பிடலாம் . . .


Ray
ஜன 17, 2025 11:53

ஆளாளுக்கு என்னென்னவோ சொல்கிறார்கள் அரசின் இந்த அறிவிப்பே டெல்லி தேர்தல் ஒன்றுதான் குறிக்கோள் டில்லி வாக்காளர்களில் பெரும்பாலும் மத்திய மாநில அரசு ஊழியர்களே எனவே அவர்களை குறிவைத்து இதை சொல்லி வாக்குகளை பறித்துவிட வேண்டுமென்ற வெறியில் அறிவிப்பு ரிசல்ட் சரியில்லையென்றால் தமிழ்நாட்டுக்கு நிதி வராததுபோல சம்பளக் கமிஷன் நடைமுறைக்கு வராது பெப்பே


SUKUMAR K
ஜன 17, 2025 11:52

அரசு ஊழியர்களுக்கு ஏன் இவ்வளவு சம்பளம்..? தனியார் நிறுவனத்தில் உள்ளது போல் திறமையானவர்களுக்கு மட்டும் அதிக சம்பளம். மற்றவர்களுக்கு எல்லாம் குறைந்த சம்பளமாக 10 ஆயிரம் மட்டும்தான். அதேபோல் 10 சதவிகிதம் மட்டும் அரசு ஊழியர்கள். மீதி 90 சதவிகிதம் அவுட்சோர்சிங் முறைதான் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். ஒரே நாடு, ஒரே தேர்தல் போல, அனைத்து 60 வயதுக்கு மூத்தவர்களுக்கு பென்ஷன் கொடுக்க வேண்டும். அதுபோல், பென்ஷன் எல்லாருக்கும் சமமாக 10 ஆயிரத்துக்கு மேல் இருக்கக் கூடாது. தனியார் நிறுவனத்தில் உள்ளது போல் ஒரு நாளைக்கு 10 - 12 மணி நேரம் வேலை, வாரத்துக்கு ஒரு நாள் விடுமுறை. எங்களுடைய வரி பணத்தில் அரசு ஊழியர்கள் மட்டும் அனுபவிக்க வேண்டுமா..? நாட்டில் உள்ள மற்றவர்கள் எல்லாம் கஷ்டப்பட வேண்டுமா..?


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 17, 2025 09:24

தனியாரில் சம்பளத்துக்கு பலவித அளவுகோல்கள் உள்ளன ..... சிபாரிசு, அனுபவம், கல்வித் தகுதி, கற்கும் திறன் இப்படி எத்தனையோ .... அரசு மற்றும் பொதுத்துறைகளில் ஒரு பணி கிரேடுக்கென்று நிர்ணயிக்கப்பட்ட சம்பளத்தைக் கொடுத்து விடுவார்கள் .... தனியாரில் புதிதாக வேலைக்குச் சேரும் ECE பொறியாளருக்கே - இடைநிலை நகரம் என்று கொண்டால் - சம்பளம் ரூ 30K தாண்டாது ..... பொதுத்துறையிலோ, அரசுத் துறையிலோ இன்றைய நிலையில் பியூனுக்கே இதில் சுமார் இருமடங்கு சம்பளம் இருக்கும் .....


முருகன்
ஜன 17, 2025 07:55

சாதாரண மக்களின் வரிப்பணத்தை ஒரு சிலர் மட்டுமே அனுபவிக்கின்றனர்


veera
ஜன 17, 2025 08:12

கட்டுமரம் கும்பலை சொல்றியா முருகன்


Dharmavaan
ஜன 17, 2025 07:36

இதனால் மற்ற எல்லோரும் பாதிக்கப்படுவர், இதை செய்யக்கூடாது 10% மேல் உயர்வு இருக்க கூடாது விலைவாசிக்கு ற்றபடி தனியார் சம்பளத்திற்குஏற்றபடி இருக்க வேண்டும்


Kasimani Baskaran
ஜன 17, 2025 07:07

இதைப்பார்த்து தமிழக அரசு சம்பளத்தை மட்டுமல்லாது கிம்பளத்தையும் பல மடங்கு உயர்த்தினால் அதற்க்கு கம்பெனி பொறுப்பேற்க முடியாது.


Raja
ஜன 17, 2025 07:00

நாட்டின் பெரும்பாலான ஏழை மற்றும் நடுத்தர மக்களிடம் ஜி.எஸ்.டி என்ற பெயரில் கொள்ளையடித்த வருவாயை, இப்படி அரசு ஊழியர்கள், அதிகாரிகளுக்கு அள்ளி அள்ளி வழங்கும் மோடி அரசுக்கு, நாட்டின் 90% மக்களை குறித்து அக்கறையும் இல்லை. கவலையும் இல்லை. நிதி மந்திரி என்ற பெயரில் ஒரு ஆகாவளி நபரை நியமித்து நாட்டை குட்டி சுவராக்கி விட்ட ஓட்டு போட்ட மக்களை எதை கொண்டு அடிப்பது?


Kasimani Baskaran
ஜன 17, 2025 09:07

இதற்க்கு முன் 40-45% வரி மாநிலம், மத்தி என்று மாற்றி மாற்றி கொள்ளையடித்து அதை கண்டவர்களும் தின்றார்கள். இன்று அது ஒருமுகப்படுத்தப்பட்டு அதிக பட்சமாக 28% என்ற விகிதாச்சாரத்தில் அரசாங்கத்துக்கு போகிறது. மாநில அரசும் மத்திய அரசும் பங்குபிரித்துக்கொள்கிறார்கள். இதைக்கூட கொடுக்க மனமில்லை என்றால் வரியில்லாத நாட்டுக்குத்தான் குடிபெயர வேண்டும்.


ஆரூர் ரங்
ஜன 17, 2025 09:35

டீப் ஸ்டேட் ஆளுங்க கூட இதை விட நிதானமாக கருத்துப் போட்டிருப்பாங்க. இவரு ஜிஎஸ்டி வருமுன் முழுக்க வரிஏய்ப்பு செய்தவரோ?


சமீபத்திய செய்தி