உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திருப்பதி நெரிசல் விபத்து: விசாரணை முடிவை திரும்ப பெற்றது மத்திய அரசு

திருப்பதி நெரிசல் விபத்து: விசாரணை முடிவை திரும்ப பெற்றது மத்திய அரசு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி ஆறு பேர் உயிரிழந்த விவகாரத்தில், நேரடி விசாரணை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், பல்வேறு எதிர்ப்பால் அந்த முடிவை மத்திய அரசு திரும்பப் பெற்றது.ஆந்திராவின் திருப்பதி - திருமலையில் உள்ள புகழ்பெற்ற ஏழுமலையான் கோவிலுக்கு, உலகம் முழுதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு, வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் தரிசனத்துக்கான இலவச டிக்கெட், திருப்பதியில் பல்வேறு மையங்களில் வினியோகிக்க கடந்த 9ம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதை வாங்க, 8ம் தேதி காலை முதலே, சிறப்பு கவுன்டர்கள் முன் ஏராளமானோர் குவியத் துவங்கினர். இதில், சீனிவாசம் கவுன்டரில் கட்டுக்கடங்காமல் திரண்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஆறு பேர் பலியாகினர்; 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அதேபோல், திருமலையில் உள்ள லட்டு கவுன்டரில், மின்கசிவு காரணமாக கடந்த 13ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இதில், உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இந்த இரு சம்பவங்கள் குறித்தும் நேரடி விசாரணை நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இதற்காக, மத்திய உள்துறை அமைச்சக கூடுதல் செயலர் சஞ்சீவ் குமார் ஜின்டால் நியமிக்கப்பட்டார். இவர், நேற்றும், இன்றும் திருமலை மற்றும் திருப்பதியில் விபத்து நடந்த பகுதியில் விசாரணை நடத்துவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு, பல்வேறு தரப்பில் எதிர்ப்பு எழுந்தது. குறிப்பாக, திருமலை திருப்பதி தேவஸ்தான விவகாரங்களில், மத்திய அரசின் தலையீடு முன்னெப்போதும் இல்லாத அளவு உள்ளதாக சமூக வலைதளங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டன. இதையடுத்து, நேரடி ஆய்வு விசாரணையை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது. சஞ்சீவ் குமார் ஜின்டாலின் வருகை ரத்து செய்வது குறித்த தகவலை, தேவஸ்தான அதிகாரிகளுக்கு மத்திய அரசு தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

aaruthirumalai
ஜன 20, 2025 23:30

நமது மதத்தை சிறப்பு செய்ய வேண்டும். மாற்று மதத்தவர் கேளி செய்வது போல் இருக்க கூடாது. நமது தரிசன முறையில் மிகப்பெரிய குறைபாடு உள்ளதை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். குறைகளை களைய நாம எதுவுமே செய்வதில்லை என்பதுதான் உண்மை.


CHELLAKRISHNAN S
ஜன 20, 2025 13:34

pl read the newspaper properly. just now I read the Dinamalar e paper. kumbamela fire accident news has been given in detail.


J.Isaac
ஜன 20, 2025 08:42

கும்ப மேளா தீ விபத்து பற்றிய செய்தி ஏன் தினமலரில் வரவில்லை


Velan Iyengaar
ஜன 20, 2025 07:52

மைனாரிட்டி கூட்டணி ஒன்றிய அரசிடம் பல்டிகளை தவிர்த்து வேறு என்ன எதிர்பார்க்கமுடியும் ???


Kasimani Baskaran
ஜன 20, 2025 07:25

கோவிலுக்குள் செல்ல கட்டம் கட்டமாக அறைகள் உண்டு. எளிதில் கூட்டத்தை கட்டுப்படுத்தி விட முடியும். ஆனால் முண்டியடித்து டிக்கெட் வாங்கவேண்டும் என்பது அப்படி அல்ல. தரிசனத்துக்கு கட்டணம் என்பதே அக்கிரமமான நடைமுறை. எந்த வித பாகுபாடும் இல்லாமல் அனைவரையும் வரிசையில் அனுப்பவேண்டும் - இல்லை என்றால் அங்கு ஆண்டவன் கூட வர பயப்படுவான்.


naranam
ஜன 20, 2025 06:14

நாயுடுவை பகைத்துக்கொள்ள முடியாது அல்லவா!


jayvee
ஜன 20, 2025 05:04

பிஜேபி அரசு செயல் பட வேண்டிய விஷயங்களில் மெத்தனமாக இருக்கிறது.. தேவையில்லாத விஷயத்தில் மூக்கை நுழைக்கிறது


அப்பாவி
ஜன 20, 2025 04:46

ஃப்ரீ ந்நு எதுவும் இல்லை. இலவசம்னா முட்டி மோதாதீங்க.


subramanian
ஜன 20, 2025 03:17

விசாரணையை நடத்தி உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும்


புதிய வீடியோ