உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மத்திய அரசின் பதில் அதிர்ச்சி அளிக்கிறது: ராகுல்

மத்திய அரசின் பதில் அதிர்ச்சி அளிக்கிறது: ராகுல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பாக மத்திய அரசு அளித்த பதில் அதிர்ச்சி அளிக்கிறது என காங்கிரஸ் எம்பி ராகுல் கூறியுள்ளார்.ஜாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் துவங்க உள்ளது.இந்நிலையில் ராகுல் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஜாதி வாரி கணக்கெடுப்பு குறித்து அரசிடம் பார்லிமென்டில் கேள்வி கேட்டேன். அவர்களின் பதில் அதிர்ச்சி அளிக்கிறது. உறுதியான திட்டமிடல் இல்லை. குறிப்பிட்ட காலக்கெடு இல்லை. பார்லிமென்டில் விவாதிக்கப்படவில்லை. மக்களுடன் ஆலோசிக்கப்படவில்லை. மற்ற மாநிலங்களில் வெற்றிகரமாக நடந்த ஜாதிவாரி கணக்கெடுப்புகளின் திட்டங்களில் இருந்து கற்றுக்கொள்ளும் விருப்பம் இல்லை. இந்த விவகாரத்தில் மோடி அரசின் நிலைப்பாடு நாட்டின் ஏழை மக்களுக்கு செய்யும் வெளிப்படையான நம்பிக்கை துரோகம் ஆகும் . இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி