உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அல் பலாஹ் மருத்துவமனைக்கு நிதி: அமலாக்கத்துறை விசாரணைக்கு உத்தரவு

அல் பலாஹ் மருத்துவமனைக்கு நிதி: அமலாக்கத்துறை விசாரணைக்கு உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லி குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்ட 4 டாக்டர்கள் பணியாற்றிய அல் பலாஹ் மருத்துவமனைக்கு வரும் நிதி குறித்து விசாரணை நடத்தும்படி அமலாக்கத்துறைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.டில்லி செங்கோட்டை பகுதியில் சிக்னலில் நின்றிருந்த கார் கடந்த 10ம் தேதி வெடித்து சிதறியது. இதில் 13 பேர் பலியாகினர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். பயங்கரவாத தாக்குதலாக அறியப்பட்ட இந்த சம்பவத்தில் காரை இயக்கி வெடிக்கச்செய்தது உமர் நபி என தெரியவந்தது. அதேபோல், இந்த குண்டுவெடிப்பில் பெண் டாக்டரான ஷாயின் சையத் மற்றும் மேலும் இரண்டு டாக்டர்களுக்கும் தொடர்பு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.இவர்கள் நான்கு பேரும், டில்லி அருகே பரிதாபாதில் உள்ள அல் பலாஹ் பல்கலையில் பணியாற்றியது தெரியவந்ததை அடுத்து அந்த பல்கலை புலனாய்வு அமைப்புகளின் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. டில்லி குண்டுவெடிப்புசம்பவம் தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமலாக்கத்துறை விசாரணை

இந்நிலையில், அல் பலாஹ் மருத்துவமனைக்கு கிடைக்கும் நிதி குறித்து விசாரணை நடத்தும்படி அமலாக்கத்துறையினருக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், இப்பல்கலையின் வரவு செலவு கணக்குகளை கேட்டுள்ள மத்திய அரசு, டில்லி போலீசின் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகளையும் பல்கலை குறித்து விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டுள்ளது.

நோட்டீஸ்

இந்நிலையில் அல் பலாஹ் பல்கலையின் சமூக வலைதள பக்கத்தில், அந்நிறுவனம் என்ஏஏசி எனப்படும் தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகாரம் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை கல்லூரிகள், பல்கலைகள் போன்ற உயர்கல்வி நிறுவனங்களின் தரத்தை மதிப்பீடு செய்து சான்று வழங்கும் தன்னாட்சி அமைப்பான என்ஏஏசி எனப்படும் தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில் மறுத்துள்ளது. இது தொடர்பாக விளக்கமளிக்க அந்த பல்கலைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Sun
நவ 14, 2025 11:35

இது வரை இந்த மருத்துவ மனையை கண்காணிக்காமல் விட்டது மத்திய அரசின் உளவுத் துறையின் தோல்வியே ! இதில் மாற்றுக் கருத்து இல்லை.


Rathna
நவ 14, 2025 11:26

வருமான வரியை ஏமாற்ற டிரஸ்ட் போன்ற அமைப்பை உருவாக்கி, உலகம் முழுவதும் தீவிரவாதம், அப்பாவி மக்களை கொல்ல பணம் வசூலிப்பது தான் இவர்களின் வேலை. மனித குல விரோதிகள் உலகம் முழுவதும் பிரச்னையை, படு கொலைகளை செய்கிறார்கள்.


Barakat Ali
நவ 14, 2025 10:23

இதுவரை சந்தேகமே வரவில்லை ....... அப்படித்தானே ????


V RAMASWAMY
நவ 14, 2025 09:18

A thorough audit and investigation is necessary all over the Nation of such suspected educational and other outfits and if found to be involved in undesirable activities, they should be closed and banned. Even Madrasas and those connected should be under scrutiny always.


Raman
நவ 14, 2025 07:14

Seal this terror university and ensure it is permanently closed.. many such institutions cultivate hatred against India and Hindus. High time Central Government must monitor these suscipious institutions and close them permanently


Kasimani Baskaran
நவ 14, 2025 04:06

கள்ளத்தனம் செய்தால் அரசுடைமையாக்கி விடலாம் - அல்லது மூடி விடலாம்.


Ramesh Sargam
நவ 14, 2025 00:10

விசாரணை எல்லாம் இனிமேல் வேஸ்ட். அந்த மருத்துவமனையை ஜேசிபி கொண்டு முற்றிலும் தகர்த்தெறியவும். அதுபோன்று நாட்டுக்கு எதிராக செயல்படும் அனைத்து மருத்டுவமனைகள், கல்விக்கூடங்கள், தொழுகை இடங்கள் எல்லாமும் தகர்த்தெறியப்படவேண்டும். பொறுத்தது போதும், போட்டுத்தள்ளு.


புதிய வீடியோ