உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராணுவத்திற்கு நன்கொடை தருமாறு வாட்ஸ் அப்பில் வரும் தகவல்கள் போலி; மத்திய அரசு எச்சரிக்கை

ராணுவத்திற்கு நன்கொடை தருமாறு வாட்ஸ் அப்பில் வரும் தகவல்கள் போலி; மத்திய அரசு எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ராணுவத்திற்கு நன்கொடை வழங்குமாறு வாட்ஸ் அப்பில் வரும் தகவல்கள் போலியானது, அதை யாரும் நம்ப வேண்டாம் என்று பொதுமக்களை மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் தாக்குதல் நிகழ்வு காரணமாக பாகிஸ்தான், இந்திய எல்லைகளில் போர் பதற்றம் நிலவுகிறது. உலகம் முழுவதும் இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந் நிலையில் இந்திய ராணுவத்திற்கு நன்கொடை வழங்குமாறு வாட்ஸ் அப்பில் வரும் செய்திகளை நம்ப வேண்டாம், அவை போலியானவை என்று பொதுமக்களை மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.இதுகுறித்து கூறப்பட்டு உள்ளதாவது; இந்திய ராணுவத்தை நவீனப்படுத்த நன்கொடை தேவை, வீரர்கள் காயம் அடைந்தாலோ அல்லது உயிரிழந்தாலோ அவர்களுக்கு நிதி அளிக்க வேண்டும் என்று கூறி வங்கி கணக்கிற்கு பணம் அனுப்புமாறு வாட்ஸ் அப்பில் வருகிறது. மத்திய அமைச்சரவை ஒப்புதல் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரை முன்னிலைப்படுத்துவதாகவும் கூறப்பட்டு உள்ளது. ஆனால் இவற்றில் உண்மையில்லை, அனைத்தும் போலி, இதுபோன்ற மோசடியான செய்திகளுக்கு மக்கள் இரையாகாமல் இருக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Easwar Samban
ஏப் 28, 2025 08:02

போலியான தகவலை அனுப்பியவர்களை கண்டு பிடித்து கடுமையான நடவடிக்கை மத்திய அரசு காலந்தாழ்த்தாமல் எடுக்க வேண்டும்.


Ramesh Sargam
ஏப் 27, 2025 22:12

மூர்க்க மார்கத்தினரே, உ ங்கள் அழிவு கூடிய சீக்கிரம்


GMM
ஏப் 27, 2025 21:42

நன்றி தினமலர் .


Ramesh Sargam
ஏப் 27, 2025 21:18

இந்த போலி தகவல்களையும் இந்தியாவில் வசிக்கும் பாக்கிஸ்தான் தீவிரவாதிகள் ஆதரவாளர்கள் கேட்டு தகவல் அனுப்பி இருக்கலாம். நன்றாக விசாரித்து அவர்களை முட்டிக்கு முட்டி, முட்டிக்கு மேலே தட்டி கடுமையாக தண்டிக்கவும்.


சமீபத்திய செய்தி