உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முதியவரை காக்க வைத்த ஊழியருக்கு சி.இ.ஓ., விசித்திர தண்டனை

முதியவரை காக்க வைத்த ஊழியருக்கு சி.இ.ஓ., விசித்திர தண்டனை

புதுடில்லி, டில்லி புறநகர் பகுதியில் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நகரம் நொய்டா. இங்கு மனை விற்பனை, அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானம், தொழில் நிறுவனங்கள் அமைத்தல் ஆகியவற்றுக்கு நொய்டா ஆணையத்தின் ஒப்புதல் பெற வேண்டும். இந்நிலையில், முதியவர் ஒருவர் தன் சொத்து விற்பனை பிரச்னை தொடர்பாக, நொய்டா ஆணைய அலுவலகத்தின் வீட்டுமனை பிரிவுக்குச் சமீபத்தில் சென்றார். அங்கு கவுன்டரில் இருந்த ஊழியர், முதியவரை ஒரு மணி நேரத்துக்கு மேலாக நிற்க வைத்துள்ளார். இதை கண்காணிப்பு கேமராவில் பார்த்த நொய்டா ஆணைய சி.இ.ஓ., லோகேஷ், தாமதிக்காமல் முதியவரின் குறையை கவனிக்கும்படி தகவல் அனுப்பினார். ஆனால், அதன் பின்னும் முதியவர் காத்திருப்பதை பார்த்து கோபமடைந்த சி.இ.ஓ., நேரடியாக வீட்டுமனை பிரிவு அறைக்குச் சென்று, அங்கிருந்தவர்களை கண்டித்தார். மேலும், முதியவரை காக்க வைத்ததற்காக அங்கு பணியில் இருந்த அனைவரையும் 20 நிமிடம் நின்றபடியே பணியும் செய்யும்படி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ