உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பச்சோந்திகள்!

பச்சோந்திகள்!

ராமர் கோவிலில் காணிக்கை திருடப்பட்டதாகக் கூறி, சனாதன தர்மத்துக்கு எதிராக சமாஜ்வாதி, காங்., தலைவர்கள் வாய்க்கிழிய பேசுகின்றனர். அதே சமயம், வக்ப் வாரியம் என வரும் போது, வாயை மூடிக் கொள்கின்றனர். பச்சோந்திகள் கூட வெட்கப்படும் அளவுக்கு, அக்கட்சியினர் தங்களது நிறத்தை மாற்றிக் கொள்கின்றனர். - யோகி ஆதித்யநாத், உ.பி., முதல்வர், பா.ஜ.,

நம்பிக்கை துரோகம்!

அயோத்தியில், ராமர் பெயரில் வசூலிக்கப்பட்ட நன்கொடைகளில் முறைகேடு நடந்திருந்தால், அது வெறும் பண மோசடி மட்டுமல்ல, கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையை திருடுவதற்கு சமம். ராமரை அரசியலுக்காக பா.ஜ., பயன்படுத்துகிறது. ராமரின் உண்மையான பக்தர்கள், மதத்தை அரசியலுக்காக பயன்படுத்த மாட்டார்கள். - சுக்விந்தர் சிங் சுகு, ஹிமாச்சல் முதல்வர், காங்கிரஸ்

ஆதாரத்துடன் பேச வேண்டும்!

அயோத்தி ராமர் கோவில், பத்ரிநாத் கோவிலில் எழுந்துள்ள நன்கொடை முறைகேடு புகார், மிகவும் தீவிரமானவை. இதை எளிதில் கடந்து விட முடியாது. இந்த விவகாரங்களில் குற்றச்சாட்டுகளை சுமத்தும் எதிர்க்கட்சிகள், தகுந்த ஆதாரத்துடன் பேச வேண்டும். இல்லையெனில், அது வெறும் அரசியல் காழ்ப்புணர்ச்சி மட்டுமே. - மாயாவதி தலைவர், பகுஜன் சமாஜ் கட்சி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை