மேலும் செய்திகள்
2028க்குள் ஏர் டாக்சி சேவை; தனியார் நிறுவனம் அறிவிப்பு
2 hour(s) ago
ஆரியங்காவில் நாளை:(டிசம்பர்-24)
4 hour(s) ago
சபரிமலையில் நாளை(டிசம்பர்-24)
4 hour(s) ago
ஹைதராபாத், ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. அடுத்த சில மாதங்களில் நடக்கவுள்ள லோக்சபா தேர்தலுடன், ஆந்திராவின் சட்டசபை தேர்தலும் நடக்க உள்ளது. இதையடுத்து, இங்குள்ள அனைத்து அரசியல் கட்சியினர் தேர்தல் பிரசாரங்களை துவங்கி, பொதுக் கூட்டங்களில் பங்கேற்று வருகின்றனர். முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு, அரக்கு என்ற பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் பங்கேற்க விசாகப்பட்டினத்தில் இருந்து, நேற்று ஹெலிகாப்டரில் புறப்பட்டார். சிறிது நேரத்திலேயே அந்த ஹெலிகாப்டர் வழி தவறி வேறு பாதையில் பயணித்தது. இதை கவனித்த விமான போக்குவரத்து கட்டுப்பாடு அதிகாரிகள், அது தொடர்பாக ஹெலிகாப்டரின் பைலட்டை எச்சரித்தனர். இதையடுத்து, சரியான வழியில் சென்ற ஹெலிகாப்டர், அரக்கு பகுதியில் பாதுகாப்பாக தரையிறங்கியது. விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்துடனான ஒருங்கிணைப்பில் இடையூறு ஏற்பட்டதால் ஹெலிகாப்டர் வழிதவறி சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
2 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago