உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மசூதியில் ஜெய் ஸ்ரீராம் கோஷமிடுவது மத உணர்வை புண்படுத்தாது: ஐகோர்ட்

மசூதியில் ஜெய் ஸ்ரீராம் கோஷமிடுவது மத உணர்வை புண்படுத்தாது: ஐகோர்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: மசூதிக்குள், 'ஜெய் ஸ்ரீராம்' கோஷம் எழுப்பியதாக இருவர் மீது போலீசார் பதிவு செய்த கிரிமினல் வழக்கை, கர்நாடக உயர் நீதிமன்றம் நேற்று ரத்து செய்தது. கர்நாடகாவின் பெங்களூரில் உள்ள மசூதி ஒன்றில், 2023 செப்., 24, இரவு 10:50 மணிக்கு நுழைந்த இருவர், 'ஜெய் ஸ்ரீராம்' என, கோஷமிட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் அந்த இளைஞர் மீது மத உணர்வுகளை புண்படுத்தியது உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.இந்த வழக்கை ரத்து செய்யும்படி, குற்றஞ்சாட்டப்பட்ட இருவரும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி நாகபிரசன்னா பிறப்பித்த உத்தரவு:இந்த சம்பவம் நடந்த பகுதியில் ஹிந்துக்களும், முஸ்லிம்களும் இணக்கமாக வாழ்ந்து வருவதாக புகார்தாரர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், எல்லா செயல்களும் மத உணர்வுகளை புண்படுத்தியதாக கூறி வழக்கு பதிவு செய்ய முடியாது என, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தெரிவித்துள்ளது. ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷம் மத உணர்வுகளை புண்படுத்தியதாக கூறுவதை புரிந்து கொள்ள முடியவில்லை. மனுதாரர்களுக்கு எதிரான மேல் நடவடிக்கைகளுக்கு அனுமதிப்பது சட்டத்தை துஷ்பிரயோகம் செய்யும் செயல். எனவே, மனுதாரர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள கிரிமினல் வழக்குகளை ரத்து செய்கிறேன்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Abdullah Sulthan
அக் 18, 2024 09:36

நல்ல ஜனநாயகம்?? மதவெறியை தூண்டும் தீர்ப்பு?? தீர்ப்பு சொன்ன நீதி மாமன்னர் போட்டோவை எல்லா வீட்டில் பூப்போட்டு பூஜிக்கவும்....?????


ஆரூர் ரங்
அக் 17, 2024 09:34

ஹிந்து ஆலயங்களில் குர்ஆன் வாசிக்கப்பட வேண்டும் என காந்தி கூறினாரே. அப்போ மசூதிகளில் ஜெய் ஸ்ரீராம் ஒலித்தால் தவறா?


subramanian
அக் 17, 2024 09:29

ஜெய் ஸ்ரீராம்


raja
அக் 17, 2024 09:11

ஆனா இங்கே பிச்சைக்காரன் ஆட்சியில் பிச்சை பொட்டவனுவோ கோவிலுக்குள் புகுந்து சிலைகளை உடைகிரானுவோ... கேட்டால் விடியலுக்கு பிச்சை போட்ட மனநிலை சரியில்லாதவன் என்று முடித்து விடுகிறார்கள்


skv srinivasankrishnaveni
அக் 17, 2024 08:22

ஆனால் மசூதிகளிலே காலங்காத்தால அல்லலாஹு அகப்பர் னு கூவுறாங்களே mikeகேவச்சுண்டு நாம் ஹிந்துக்கள் எதுவும் கூறமுடியுமா ஏவாளும் ஒரிஜினல் முஸ்லீம் காலே இல்லீங்க எல்லாம் கட்டாயமா மதம் மாற்றப்பட்டவா முஸ்லீம் மன்னர்கள் காலத்ததுலேந்து


sridhar
அக் 17, 2024 08:11

சட்டப்படி தவறோ இல்லையோ, இது தேவை இல்லாத வேலை .


raja
அக் 17, 2024 09:13

விடிய காத்தால தடை செய்ய பட்ட கூம்பு ஒலி பெருக்கி வைத்து தூக்கத்த கெடுகிரானுவோலே அது தேவையான வேலையா உடன்பிறப்பே...


R.RAMACHANDRAN
அக் 17, 2024 08:03

மத வெறியர்கள் அவர்கள் கொள்கைகளை கோயில்கள் மசூதிகள் தேவாலயங்களில் புகுத்துவதை தடுத்து அவைகள் கோயில்கள் மசூதிகள் தேவாலயங்கள் பொதுவானதாக நடத்த வழி வகைகள் செய்ய வேண்டும்.


Ramesh
அக் 17, 2024 07:37

தவறான தீர்ப்பு. பிற மதத்தினர் வழிபாட்டு தலத்தில் இது போல் செய்ய கூடாது.


1968shylaja kumari
அக் 17, 2024 09:33

அப்படியென்றால் நாளை வேறு ஒரு நபர், கோவிலுக்குள் புகுந்து அல்லாஹு அக்பர் என்று கோஷமிட்டால் அதுவும் மதஉணர்வை புண்படுத்துவது ஆகாத?


Oviya Vijay
அக் 17, 2024 07:33

வழக்கை ரத்து செய்து விட்டு அவ்வாறு கோஷமிட்டவர்களை மென்டல் ஹாஸ்பிடலில் சேர்க்க உத்தரவிடுங்கள். மனநலம் சரியில்லாதவர்கள் தான் இவ்வாறு செய்வார்கள்.


Barakat Ali
அக் 17, 2024 07:04

பல இஸ்லாமியர்கள் கோவிலில் கூட புகுந்துள்ளனர்... பிறகு அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர்... சமீபத்திய உதாரணம் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலையத்தில் நுழைந்து இஸ்லாமியப்பெண் ஒருவர் தொழுகை செய்தது... இவை அனைத்தும் அடாத செயல்களே .......


raja
அக் 17, 2024 09:18

நண்பா.. இப்போ உள்ள கைபேசி தொழில் நுட்பத்தில் உங்கள் இனத்தவர்கள் ஒரு வாட்ஸ் அப் குருப் ஏற்படுத்தி விடியல் காலை தொழுகைக்கு மெசேஜ் அனுப்பலாம்.. இல்லை என்றால் அலாரம் வைத்து கொள்ளலாம் .. இன்னும் அடுத்தவர் தூக்கத்தை கெடுக்கும் ஒலி பெருக்கி எதற்கு? உங்களை போன்ற ஆட்கள் உங்கள் ஜமாத்தாரிடம் சொல்லி ஏற்பாடு செய்யலாமே...இப்படி செய்தால் அடுத்த மத்தவரும் உங்கள் மனம் புண்படும் படி நடக்க மாட்டார்களே... இது என் சொந்த கருத்து தான்..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை