உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆண்டுக்கு 3 முறை இறுதித்தேர்வு; சி.ஏ., தேர்வு முறையில் அதிரடி மாற்றம்

ஆண்டுக்கு 3 முறை இறுதித்தேர்வு; சி.ஏ., தேர்வு முறையில் அதிரடி மாற்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சி.ஏ., தேர்வு முறையில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இறுதித்தேர்வு இனி ஆண்டுக்கு மூன்று முறை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனம் (ஐ.சி.ஏ.ஐ.,) சார்பில் சிஏ எனும் பட்டயக் கணக்காளர் பணித் தேர்வு ஆண்டுதோறும் இருமுறை நடத்தப்படுகிறது. இந்த சிஏ தேர்வு அடிப்படை, இடைநிலை, இறுதி என 3 நிலைகளில் நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே ஆடிட்டராக முடியும். பட்டப்படிப்பை முடித்தவர்கள் மட்டும் அடிப்படைத் தேர்வை எழுதாமல், இடைநிலை மற்றும் இறுதித் தேர்வை எழுதினால் போதுமானது.தற்போது, சி.ஏ., தேர்வு முறையில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இறுதித்தேர்வு இனி ஆண்டுக்கு மூன்று முறை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 'ஆண்டுக்கு இருமுறை நடத்தப்பட்டு வந்த சி.ஏ., தேர்வு இனி ஜனவரி, மே, செப்டம்பர் ஆகிய மாதங்களில் நடத்தப்படும். மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்புகள் வழங்கும் வகையில் முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது' என இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனம் (ஐ.சி.ஏ.ஐ.,) அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Natchimuthu Chithiraisamy
மார் 28, 2025 12:46

IAS தேர்வில் இதே போல் செய்து VO முதல் IAS ஒபிபிசெர் ஆக்குங்கள்


ram
மார் 28, 2025 10:24

எதற்கு இதையும் ஒன்னும் இல்லாமல் செய்து விட போகிறார்கள். பிஜேபி அரசின் தவறான முடிவு.


கண்ணன்
மார் 28, 2025 11:57

ஐயா, இப்படிப்பிற்கும் மத்திய அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை விஷயங்களை அறிந்து கொள்ள நன்கு படித்திருக்க வேண்டும் .


தவெக மயிலாப்பூர்
மார் 28, 2025 09:31

Good


முக்கிய வீடியோ