மேலும் செய்திகள்
வாய் சவடால் தலைவர்கள்!
22-Dec-2024
* கடையானது கட்சி மனை!கை கட்சியோட அலுவலகம் ஏற்படுத்த மனை வாங்கி வெச்சு, 50 ஆண்டுகள் முடிந்து போயிருக்கலாம். அரசியல், ஆட்சி அதிகாரம் இருந்தும் கூட அதிகாரத்தில் இருந்தவங்க தங்களை மட்டுமே வளமாக்கிக் கொண்டனரே தவிர, கட்சிக்கான மனையில் ஆபீசை உருவாக்கல. அந்த நிலத்தோட பட்டா, யார் வீட்டுல துாங்குதோ. அதனை துாசி தட்டி எழுப்ப கூட மனம் இல்லை. இதனால் அந்த இடத்தில், திடீர் கடை ஒன்று முளைத்திருக்குது. கட்சியை வியாபார தலமாக மாற்றிட்டாங்க.கை கட்சி ஆரம்பித்து 100வது ஆண்டு விழா கொண்டாடுற காலத்தில, அந்த கட்சி இடத்தை சந்தடி சாக்கில் வாடகைக்கு விட்டது யார். இதனால் எவ்வளவு லாபம் கிடைச்சிருக்கு என கணக்கு கேக்கப்போறாங்களாம்.------* மருத்துவமனைக்கு நோய்? டாக்டர்கள் பற்றாக்குறை. இது தான் சிவில் மருத்துவமனைக்கே உள்ள வியாதி. மருந்து இல்லை, மாத்திரை இல்லை என்ற ரணங்களும் இருந்தவாறே இருக்குது. பேன்டேஜ் கூட வெளியில் வாங்க வேண்டிய அவலமும் ஒலிக்குது.டாக்டர்கள் இருந்தால் தானே, நோயாளிகளுக்கு நோய் குணமாகும். சின்ன நோயோ, பெரிய நோயோ வெளி நகரங்களுக்கு போகச் சொல்லி நோயாளிகளை வெளியேற்றும் நிலை தொடருது. இதுக்கு யார் பொறுப்பு. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்யலாமா.--------* தகுதி என்னாச்சு?மினி விதான சவுதாவில் கமிஷன் ஏஜென்டுகள் தொல்லை பெருகியவாறு இருக்குது. ஆபீசர்களை பார்க்க விடாம வழிமறித்து பேரம் பேசுறவங்கள கட்டுப்படுத்த வேணும்னு ஜனங்க பேசுறாங்க. இதில ஜாதி சர்ட்டிபிகேட், முதியோர், விதவை பென்ஷன், ரேஷன் கார்டு, உட்பட எல்லாவற்றுக்குமே ஏஜென்டுகள் தான் பெரிய ஆபீசர்கள் டியூட்டி பாக்குறாங்க. ஊழல் ஒழிப்பு படைக்காரங்க இந்த பக்கம் பார்வையை செலுத்துவாங்களான்னு அங்குள்ளவங்க அங்கலாய்க்கிறாங்க. தாலுகா உருவாகி இன்னமும் கூட பல துறைகள் இங்கு இடம் பெறல. ப.பேட்டைக்கு தான் போக வேண்டியுள்ளது. இது அரசு கவனத்துக்கு போனதாக தெரியலையே. போயிருந்தால் அரசு ஏன் நடவடிக்கை எடுக்கல. பேருக்கு தான் தாலுகா தகுதி இருப்பதாக சொல்லிக்கணும் போல.-----* மெத்தனம் ஏன்?கோல்டு சிட்டி விவேக் நகரில் மேல் நிலைத் தொட்டி, கடந்த 10 ஆண்டா கட்டுறாங்க; கட்டிக்கொண்டே இருக்காங்க. இது எப்போது தான் முடிக்க போறாங்களோ. போகிற போக்கை பார்த்தால் இந்த பணியில 'சில்வர் ஜூப்ளி' கொண்டாடும் போல உள்ளது.அதே போல முனிசி., ஆபீஸ் பக்கத்தில் இருக்கிற வாட்டர் ஹவுஸ் டேங்கர் கட்டுமான பணியும் கூட மெல்ல ஆமை போல நடக்குது. பணியை முடிக்க விதிக்கப்பட்ட டெண்டர் காலம் மறந்துடுச்சா. இதில் தரம் உள்ளதான்னு இப்பவே இன்ஜினியர்கள் சோதனை நடத்த வேண்டும். ஏன்னா தாமதம் ஏற்படுவதால் அதன் மீது மக்கள் நம்பிக்கை இழக்குறாங்க.***
22-Dec-2024