உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திருப்பதிக்கு ரூ.6 கோடி சென்னை பக்தர் நன்கொடை

திருப்பதிக்கு ரூ.6 கோடி சென்னை பக்தர் நன்கொடை

திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சென்னையைச் சேர்ந்த பக்தர், 6 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளதாக, அதன் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஆந்திராவின் திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். இந்நிலையில், ஏழுமலையானை தரிசிக்க வந்த சென்னையைச் சேர்ந்த வர்த்தமான் ஜெயின் என்ற பக்தர், தேவஸ்தானத்திற்கு 6 கோடி ரூபாய் நேற்று முன்தினம் நன்கொடை அளித்து உள்ளார்.இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் நேற்று வெளியிட்ட அறிக்கை:சென்னையைச் சேர்ந்த வர்த்தமான் ஜெயின் என்ற பக்தர், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் இயங்கும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனல் நிர்வாகத்துக்கு 5 கோடி ரூபாய், கோசாலைக்கு ஒரு கோடி ரூபாய் என மொத்தம் 6 கோடி ரூபாய்க்கான காசோலையை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கூடுதல் நிர்வாக அலுவலர் வெங்கய்யா சவுத்ரியிடம் வழங்கினார்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

R KUMAR
ஜன 25, 2025 21:21

தனியார் என்னதான் தத்து எடுத்தாலும், கிராம மேம்பாட்டிற்க்காக என்று ஒரு தொகை அரசின் கணக்கில் செலவு எழுதப்படும், அப்புறம் தனியார் எதற்கு ஒரு கிராமத்தை தத்து எடுக்கவேண்டும், அப்புறம் அரசு எதற்கு?


seshadri
ஜன 25, 2025 08:02

உனக்கு என்னடா நீ ஒரு கிறுத்து., நீ ஏன் இதை பற்றி கமெண்ட் செய்கிறாய்


RR Donn Lee
ஜன 21, 2025 23:33

Stupid & nonsense, instead of Donating this 6 Crore to the temple. You can construct orphanages, Hospitals, Veterinary clinic, Chari trust.


Alagusundram Kulasekaran
ஜன 21, 2025 14:52

பிழைப்பு சென்னை தமிழ் நாடு வந்தேறியா இவன் தமிழ் நாட்டில் வந்தேறிகள் அதிகம் ஒரு குடும்பம் தமிழ் நாட்டை சுரண்டி வாழுகிறது என்று முன்னாள் முதல்வர் புரட்சி தலைவி அம்மா அவர்கள் சொன்ன கருத்து நினைவுக்கு வருகிறது அது உண்மை நம்ம முதல்வரின் மனைவி தூர்க்கா ஸ்டாலின் கேரளா கோயிலுக்கு வெள்ளி கீரிடம் வழங்கியதை நினைவு கூர்ந்து பாருங்கள் வரும் தைப்பூசம் பழனி முருகன் கோவில் கேரளா பக்தர்கள் அதிகளவில் வருவார்கள் மிஞ்சி போனால் 59ரூபாய் மட்டுமே அனால் இங்கிருந்து கோடி கணக்கில் அங்கே பணம் போகிறது இங்கே போட்டாலும் அறநிலையத்துறை வெள்ளை அடிக்கும் எல்லாம் அவன் செயல் அவனிடம் கணக்கு சொல்ல வேண்டிய நேரம் வரும் பெரு எவனுடனாவது ஒடி போகும்


Raj
ஜன 21, 2025 07:05

முட்டாள், எத்தனை ஏழை கிராமங்கள் பட்டினியும், பசியுமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவி செய்யலாமே. இல்லையென்றால் ஒரு கிராமத்தை தத்து எடுக்கலாமே. அந்த 5 கோடியை நிர்வாகமே சுருட்டி விடும்.


Mahalingam
ஜன 21, 2025 08:02

அவரவர் தகுதிக்கு ஏற்றாற்போல் முட்டாள்கள் arubathu வருடமாக கொள்ளையடிikkum கும்பலை மறுபடி மறுபடி தேர்ந்து எடுக்கும் மு போல


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை