உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சத்தீஸ்கரில் தொடரும் என்கவுன்டர்; நக்சல் தலைவி சுட்டுக்கொலை

சத்தீஸ்கரில் தொடரும் என்கவுன்டர்; நக்சல் தலைவி சுட்டுக்கொலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் தண்டேவாடா பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில், நக்சல் தலைவி ரேணுகா என்கிற பானு சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.சத்தீஸ்கர் மாநிலம், தண்டேவாடா பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.அப்போது பாதுகாப்பு படையினர் மற்றும் நக்சலைட்டுகள் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில், நக்சல் தலைவி ரேணுகா என்கிற பானு சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.மேலும் பலர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே, இவர் குறித்து தகவல் தெரிவிப்பவருக்கு ரூ.25 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

யார் இந்த ரேணுகா என்கிற பானு?

* ரேணுகா என்கிற பானு நக்சல் ஊடக குழுவின் பொறுப்பாளராக இருந்தார்.* இவர் தெலுங்கானாவின் வாரங்கல் மாவட்டத்தில் வசித்து வந்தார்.* தற்போது பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் நக்சல் தலைவி ரேணுகா என்கிற பானு கொல்லப்பட்டார்.* இவர் உயிரிழந்த இடத்தில் இருந்து துப்பாக்கி, ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.* 2025ம் ஆண்டில் இதுவரை எல்லையில் நடந்த பல்வேறு என்கவுன்டரில் நக்சலைட்டுகள் 119 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை குறிப்பிட்டு, சத்தீஸ்கர் துணை முதல்வர் அருண் சாவ், ஆயுதமேந்திய நக்சலிசத்தை ஒழிப்பதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.மேலும் அவர் கூறியதாவது: நமது பாதுகாப்புப் படையினர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். நமது பாதுகாப்புப் படையினர் துணிச்சல் உடன் செயல்படுவதால், குறிப்பிட்ட நேரத்தில் நக்சலிசத்தை ஒழிப்போம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Iyer
மார் 31, 2025 19:46

நமக்கெல்லாம் இரும்பு மனிதர் சர்தார் படேலை காணும் பாக்யம் இல்லை. ஆனால் சர்தார் படேலின் ஆத்மா அமித் ஷா ரூபத்தில் வந்திருக்கிறது


குடந்தை செல்வகுமார்
மார் 31, 2025 17:59

இந்தியாவின் இரும்பு மனிதர் அமித்ஷா


A1Suresh
மார் 31, 2025 16:58

பாகிஸ்தானிலேயே புகுந்து நமது பாரதத்தின் ரகசிய ஏஜென்டுகள் வேட்டையாடுகிறார்கள். பூ இதென்ன வெறும் நக்சலைட்டுகள் மட்டுமே. காஷ்மீரிலும் முழுமையாக பயங்கரவாதிகள் ஒழிக்கப்படவேண்டும். அவ்வப்பொழுது நமது அதிகாரிகளையும் வீரர்களையும் காவு கொடுப்பது வருந்தத்தக்கது


M R Radha
மார் 31, 2025 16:58

எல்லா ஆயுத/பண ஆதாய ரூட்டை அடையுங்க தேச விரோத சக்திகளை உள்ளேயே விடாதீங்க, குறிப்பாக அந்த தேச விரோத குடும்ப காங்கிரெஸ் வாரிசுகளை. சீனாக்காரனும் மூக்கை நுழைக்க பார்பான். ஆகவே உஷார்.


A1Suresh
மார் 31, 2025 16:56

சொர்ணாக்கா காலி


தர்மராஜ் தங்கரத்தினம்
மார் 31, 2025 16:52

வேறவிதமா யூஸ் பண்ணியிருக்கலாம் ......


Amar Akbar Antony
மார் 31, 2025 15:39

என்றோ செய்திருக்க வேண்டிய காரியங்கள் தற்போது தாமரை மலர்ந்த பின்னர் நடக்கிறது.


முக்கிய வீடியோ