உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சீன வெள்ள அபாயங்களை தடுக்கவே சியாங் திட்டம்: அருணாச்சல் முதல்வர்

சீன வெள்ள அபாயங்களை தடுக்கவே சியாங் திட்டம்: அருணாச்சல் முதல்வர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இடா நகர்: “மின்சார உற்பத்தி செய்வதற்கு மட்டுமின்றி, சீனாவில் இருந்து வெளியேறும் வெள்ள அபாயத்தை குறைக்கவும், சியாங் மேலடுக்கு பல்நோக்கு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துகிறது,” என, அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டு தெரிவித்துள்ளார். வட கிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் முதல்வர் பெமா காண்டு தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது.இங்குள்ள சியாங் ஆற்றின் குறுக்கே 1.13 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 'சம்ப்' எனப்படும் சியாங் மேலடுக்கு பல்நோக்கு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அணை மற்றும் நீர்மின் திட்டத்துடன் கூடியதாக இந்த திட்டம் இருக்கும். இதற்கான பூர்வாங்க பணிகள் நடந்து வருகின்றன. இந்த திட்டத்துக்கு உள்ளூர் மக்கள் மற்றும் சில சமூக அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.இந்நிலையில், இந்த திட்டம் குறித்து முதல்வர் பெமா காண்டு நேற்று கூறியதாவது:தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த சியாங் மேலடுக்கு பல்நோக்கு திட்டத்தின் உண்மையான நோக்கமே, சியாங் ஆற்றையும், அதை பல தலைமுறைகளாக நம்பி வாழும் சமூக மக்களையும் காப்பதுமே ஆகும். இந்த திட்டத்துக்கான நிறுவப்பட்ட திறன் 11,000 மெகாவாட். இந்த அணையின் நீர்த்தேக்கம் 900 கோடி கனமீட்டர் கொள்ளளவு கொண்டதாக இருக்கும். இது வறண்ட காலங்களில் கூட, நதியின் சீரான ஓட்டத்தை பராமரிப்பதை உறுதி செய்யும். இங்கு நீர்மின் உற்பத்தி செய்யப்படுவது முக்கியமல்ல. சியாங் நதியின் இயற்கையான ஓட்டத்தை பராமரிக்கவும், நம் அண்டை நாடான சீனாவில் இருந்து வெளியேற்றப்படும் வெள்ள அபாயங்களை தடுக்கவுமே இந்த திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துகிறது. சீன அணைகளில் இருந்து திடீரென நீர் திறக்கப்பட்டால், வெள்ளம் ஏற்பட்டு அருணாச்சல பிரதேசம், அசாம் மற்றும் வங்கதேசம் பேரழிவை சந்திக்கும். அந்த நேரத்தில் இந்த அணை, ஒரு இடையகமாக செயல்படும். இந்த திட்டம் குறித்து உள்ளூர் மக்கள் ஒருபோதும் கவலைப்பட வேண்டாம். மக்களிடமும் இது குறித்து கருத்துக்கள் கேட்கப்படும். இந்த திட்டம் குறித்து சில அமைப்புகள் பொய் பிரசாரம் செய்கின்றன. நம் அண்டை நாடான திபெத்தில், சீனா புதிய அணை கட்ட ஏற்பாடு செய்து வருகிறது. இந்த திட்டத்தை செயல்படுத்தும்போது, பாதுகாப்பு நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படாவிட்டால், அந்நாடு கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்.சீனாவின் புதிய அணை கட்டும் திட்டத்தால், பிரம்மபுத்ராவில் இருந்து நீர்வரத்து குறைந்து, சியாங் ஆற்றின் ஓட்டம் வெகுவாக குறைய வாய்ப்புள்ளது. புதிய திட்டத்தை சீனா கவனமுடன் கையாள வேண்டும். அங்குள்ள சூழல், கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

சீனாவுக்கு பதிலடி?

திபெத்தில் உருவாகும் யார்லுங் சாம்போ என்ற நதி, இந்தியாவிலும், நம் அண்டை நாடான வங்கதேசத்திலும் பிரம்மபுத்ரா என்ற பெயரில் பாய்கிறது. இந்த நதியின் குறுக்கே உலகிலேயே மிகப்பெரிய அணையைக் கட்டும் நடவடிக்கையில் சீனா ஈடுபட்டுள்ளது. இதனால், இந்தியா மற்றும் வங்கதேசத்தில் கடும் பாதிப்பு ஏற்படும் என்ற கருத்துக்கள் எழுந்த நிலையில், சியாங் திட்டம் குறித்த விளக்கத்தை பெமா காண்டு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Dharmavaan
டிச 30, 2024 09:16

பிஜேபியின் சரியானா பாதுகாப்பு நடவடிக்கை.இல்லையேல் சீனா வேண்டுமென்ற கோடைகாலத்தில் நீரை தடுத்து மழை காலத்தில் மொத்த நீரையும் வெளியேற்றி வெள்ளக்காடாக நம் நாட்டை அழிந்துவிடும்


N.Purushothaman
டிச 30, 2024 08:33

ஒரு மத்திய அரசு எப்படி எல்லாம் ஆட்சி செய்ய கூடாதுஎன்பதற்கு முந்தைய தேசவிரோத முதுகெலும்பற்ற காங்கிரஸ் ஆட்சியே முன்னுதாரணம் ....அவர்களின் கையாலாகாத ஆட்சியால் இந்தியா ராணுவத்தில் சீனாவை விட இருபது ஆண்டுகள் பின் தங்கி உள்ளன ...உள்கட்டமைப்பு வசதிகளில் கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகள் பின் தங்கி உள்ளன.. வெள்ளைக்காரன் நம்மை அடிமைப்படுத்தியது போல இப்போ சீனாக்காரன் நம்மள அடிமைப்படுத்த பல வழிகளிலும் முயற்சி செஞ்சிகிட்டு இருக்கான் ..நல் வாய்ப்பாக மோதி அவர்கள் பிரதமராக வந்த பின்பு வட கிழக்கில் நிரந்தர அமைதி மற்றும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்கிற கருத்தாக்கம் ஆழமாக விதைக்கப்பட்டு வருகிறது ...அதோடு வளர்ச்சிப்பணிகள் உள்கட்டமைப்புக்கள் வேகமெடுத்து உள்ளன ...இது போதாது ....இன்னும் விரைவுபடுத்த வேண்டும் ....


Kasimani Baskaran
டிச 30, 2024 07:38

காங்கிரஸ் வடகிழக்கு மாநிலங்களை இந்தியாவாகவே கருதியது கிடையாது. இன்று வடகிழக்கில் வளர்ச்சி என்பது பாஜகவின் கனவுத்திட்டம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை