தலைமை நீதிபதி பொறுப்பேற்பு
இந்தியாகேட்:டில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக தேவேந்திர குமார் உபாத்யாய பொறுப்பேற்றுக் கொண்டார்.ராஜ் நிவாஸில் நடந்த விழாவில் துணைநிலை கவர்னர் வி.கே. சக்சேனா, நீதிபதிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.இந்த விழாவில் முதல்வர் ஆதிஷி மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.பாம்பே உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி உபாத்யாய, 14ம் தேதி டில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.