உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 22 வடிகால்வாய்களை துார்வாரும் பணி துணை நிலை கவர்னருடன் முதல்வர் ஆய்வு

22 வடிகால்வாய்களை துார்வாரும் பணி துணை நிலை கவர்னருடன் முதல்வர் ஆய்வு

வஜிராபாத்:22 வடிகால்வாய்களை துார்வாரும் பணிகளை முதல்வர் ரேகா குப்தா ஆய்வு செய்தார்.யமுனா நதியை சுத்திகரிக்கும் பணிகளையும் துார்வாரும் பணிகளையும் முதல்வர் ரேகா குப்தா நேற்று ஆய்வு செய்தார். அவருடன் துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனா, மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் பர்வேஷ் சாஹிப் சிங் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளும் சென்றிருந்தனர்.வஜிராபாத் தடுப்பணை, துணை வடிகால் பகுதி, பராபுல்லா வடிகால் பகுதி, சன்ஹேரிபுல் வடிகால் பகுதி, குஷாக் வடிகால் பகுதிகளில் நடந்து வரும் துார்வாரும் பணிகளையும் முதல்வர் ஆய்வு செய்தார்.நஜாப்கர் மற்றும் ஷாஹ்தாரா உட்பட 22 பெரிய வடிகால்வாய்களில் தற்போது துார்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த வடிகால்வாய்கள் அனைத்தும் தற்போது நீர்ப்பாசனம் மற்றும் வெள்ளத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன.வெள்ள காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகளில் நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவின்பேரில், இந்த நடவடிக்கையை மாநில நகர்ப்புற மேம்பாட்டுத் துறை எடுத்தது.ஆய்வுக்குப் பின் முதல்வர் கூறியதாவது:வடிகால்வாய்களை துார்வாருவதோடு, யமுனா நதிக்கரை திட்டமும் முழு வீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்துப் பணிகளும் தரமுடன் மேற்கொள்ளவும் உரிய நேரத்தில் முடிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.யமுனா சுத்தம் செய்யும் செயல்முறையை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். 22 வடிகால்வாய்களை சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் இந்த வடிகால்வாய்களில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட நீர், ஆற்றில் சேரும்போது நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளின்படி இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.மழைக்காலங்களில் நகரத்தில் வெள்ளத்தடுப்பு பணிகளுக்கு இந்த வடிகால்வாய்களை சுத்தம் செய்வது உதவியாக இருக்கும் என, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி