உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேசிய கீதத்தை அவமதித்த முதல்வர்: ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு தர்ம சங்கடம்

தேசிய கீதத்தை அவமதித்த முதல்வர்: ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு தர்ம சங்கடம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: பீஹாரில் விளையாட்டு தின துவக்க விழாவில் தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்தாமல் அருகே நின்றிருந்த ஐ.ஏ.எஸ்.அதிகாரியிடம் முதல்வர் நிதிஷ்குமார் குறும்பு செய்த வீடியோ வைரலாகி வருகிறது.பீஹார் மாநிலம் பாட்னாவில் உள்ள பாடாலிபுத்திர விளையாட்டு மைதான வளாகத்தில் நேற்று மாநில அரசு சார்பில்விளையாட்டு போட்டி துவக்க விழா நடந்தது. இதில் முதல்வர் நிதிஷ்குமார். அமைச்சர்கள், உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.மரபுபடி துவக்க விழாவில் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது. அனைவரும் எழுந்து நின்று தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்தினர்.ஆனால் முதல்வர் நிதி்ஷ்குமார், தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்தாமல், தன் அருகே நின்றிருந்த ஐ.ஏ.எஸ்.அதிகாரியும், முதல்வரின் முதன்மை செயலருமான தீபக் குமாரிடம் சிரித்து பேசியும், அவரது தோளில் கை வைத்து குறும்புத்தனம் செய்து கொண்டிருந்தார். தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்தி கொண்டிருந்த அந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி முதல்வரின் செயலால் தர்ம சங்கடத்திற்கு ஆளானார். இது இணையதளத்தில் வெளியாகியுள்ளது.மாநில முதல்வர் தேசிய கீதத்தை அவமதிக்கும் விதமாக நடந்து கொண்டதாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

பல்லவி
மார் 21, 2025 17:11

ஓர் அறிவு வேலை செய்ய வில்லை போலும்


Nallavan
மார் 21, 2025 11:14

இதை கண்டிக்குமா ?


baala
மார் 21, 2025 10:22

அறிவு என்கிற ஓன்று


Velan Iyengaar
மார் 21, 2025 08:32

உலகமகா பணக்கார தேர்தல் பத்திர மெகா ஊழல் bj கட்சியோட கூட்டாளி... ஹா ஹா ஹா ஹா ...... இதுக்கு அந்த ஊரு கெவுனர் எதுக்கு சும்மா இருக்காரு? ஜனாதிபதி எதுக்கு சும்மா இருக்காங்க?


KavikumarRam
மார் 21, 2025 10:38

தப்பு யார் பண்ணாலும் தப்பு தான்.


சின்ன சுடலை ஈர வெங்காயம் ராமசாமி
மார் 21, 2025 11:55

சிந்தாதிரிப்பேட்டை உபி. சுடலினுக்கு ஒரு கடிதம் எழுதச் சொல்.


Sampath Kumar
மார் 21, 2025 08:05

இப்போ இதுக்கு என்ன சொல்லுகிறாய்


KavikumarRam
மார் 21, 2025 10:41

யாரை கேக்குற


ஆரூர் ரங்
மார் 21, 2025 07:01

கண்டனத்துக்குரியதுதான்.


अप्पावी
மார் 21, 2025 06:54

போறும்டா.. இதுவரை எத்தனை ஆயிரம் முறை எழுந்து நின்னுருப்பாரு..


Raj
மார் 21, 2025 06:50

இப்பொழுது எல்லாம் மறைகழன்றவர்கள் தான் முதல்வர்களாக இருக்கிறார்கள் போல.....


naranam
மார் 21, 2025 06:23

அவர் மறந்திருக்கலாம்! அல்லது தேசிய கீதம் ஆரம்பித்து விட்டது என்பதை அவர் உணரவில்லையோ என்னவோ? இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா?


கலைஞர்
மார் 21, 2025 06:12

இதுக்காக தான் தமிழகத்தில் தேசிய கீதம் பாட செய்வதில்லை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை