உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குடும்பத்துடன் இருப்பது போன்ற உணர்வு: சோனியா, ராகுலை சந்தித்தது குறித்து முதல்வர் கருத்து

குடும்பத்துடன் இருப்பது போன்ற உணர்வு: சோனியா, ராகுலை சந்தித்தது குறித்து முதல்வர் கருத்து

புதுடில்லி: டில்லி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா, ராகுலை சந்தித்து பேசினார். குடும்பத்துடன் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுவதாக ஸ்டாலின் கூறியுள்ளார்.பிரதமர் மோடி தலைமையில் நாளை நிடி ஆயோக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக்கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் இன்று டில்லி சென்றுள்ளார். நிடி ஆயோக் கூட்டத்திற்கு இடையே பிரதமர் மோடியை தனியே சந்தித்து பேச முதல்வர் அலுவலகம் நேரம் கேட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்நிலையில், ஸ்டாலின் டில்லியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா, ராகுலை சந்தித்து பேசினார்.இந்த சந்திப்பு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: டில்லியில் சோனியா, ராகுலை சந்திக்கும் ஒவ்வொரு நிகழ்விலும் ஒரு சிறப்பான அரவணைப்பு இருக்கிறது. இது சாதாரண வருகை இல்லை. குடும்பத்துடன் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. இவ்வாறு அந்த பதிவில் ஸ்டாலின் கூறியுள்ளார்.

நலம் விசாரிப்பு

பஹல்காம் தாக்குதல் சம்பவத்தில் படுகாயம் அடைந்து டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பரமேஸ்வரனை, முதல்வர் ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்தார். அரசு சார்பில் தேவையான உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக உறுதி அளித்தார்.பிறகு டில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தை ஆய்வு செய்தார். சில மாநில முதல்வர்களையும் தனித்தனியே சந்திக்கவும் ஸ்டாலின் திட்டமிட்டு உள்ளதாக தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 52 )

Natarajan Ramanathan
மே 30, 2025 22:45

மக்கு அப்பனுக்கு மக்கு பிள்ளையை பார்த்தால் ஒரே குடும்பத்தில் இருப்பதாக எண்ணம் வருவது திண்ணம்.


Anu Sekhar
மே 27, 2025 23:15

லஞ்சம் அடிப்பவர்கள் கூட்டம் இரண்டும் . ஒரே கூட்டத்தில் ஊறிய மட்டைகள். பேச்சு எதற்கு. கொள்ளையடிக்க ஹிந்தி பேச வேண்டாம்.


அப்பாவி
மே 24, 2025 11:16

அடடே... அது இந்தி பேசும் இத்தாலி குடும்பமாச்சே. உங்களை வெச்சிக்கிட்டு கிண்டலடிச்சாலும் புரியாதே நைனா.


Bhakt
மே 24, 2025 00:53

ஆமாம் நைனா. ரெண்டு ஃபாமிலியும் திஹார் தான்.


C.SRIRAM
மே 23, 2025 23:13

அங்கும் ஒரு குடும்பம் ?. விளங்கிடும்


Anbuselvan
மே 23, 2025 22:29

சரியான கூட்டணி. ஒத்த சிந்தனையுடையவர்கள் சந்திப்பு


பேசும் தமிழன்
மே 24, 2025 13:57

எப்படி ஊழல் மூலம் கொள்ளை அடிக்கலாம் என்பதில்..... ஒத்த சிந்தனை கொண்டவர்கள் !!!


Karthik
மே 23, 2025 22:14

திமுக குடும்ப கட்சி தலை + காங்கிரஸ் குடும்ப கட்சி தலைவர் = கூட்டு குடும்ப கட்சி குரூப் போட்டோ.. ஆமென்.


xyzabc
மே 23, 2025 22:11

இது எல்லாம் வெறும் பேத்தல். பணம் தரல என மத்திய அரசை சாட வேண்டியது. உரிமை என்று கூவ வேண்டியது.


theruvasagan
மே 23, 2025 21:49

நாளைக்கு இன்னொரு இடத்துக்கு போகும்போது திகார்ல இருக்குற மாதிரியான ஃபீலிங் வந்தாலும் வரலாம்.


Venkatesh
மே 23, 2025 21:49

இரண்டு குடும்பமும் வாரிசு அரசியல் குடும்பம்.... பல ஊழல் விஷயத்தில் குற்றம் சாட்டப்பட்ட குடும்பங்கள்.... தேச விரோத செயல்களில் முனைப்புடன் ஈடுபடுவதாக மக்களால் குற்றம் சாட்டப்படும் குடும்பம்... மொத்தத்தில் தேவை இல்லாத கூட்டம் என்பது மக்கள் கருத்து


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை