உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நிடி ஆயோக் கூட்டத்தில் ஏழே நிமிடங்கள் மட்டும் தமிழில் பேசிய முதல்வர் ஸ்டாலின்!

நிடி ஆயோக் கூட்டத்தில் ஏழே நிமிடங்கள் மட்டும் தமிழில் பேசிய முதல்வர் ஸ்டாலின்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''நிடி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் ஏழே நிமிடங்கள் மட்டும் தமிழில் பேசினார்.டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிடி ஆயோக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட பல்வேறு மாநில முதல்வர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் பங்கேற்ற மற்ற மாநில முதல்வர்கள் உட்பட அனைவருமே ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில் தான் பேசினர். ஆனால், தமிழக முதல்வர் ஸ்டாலின் மட்டுமே தமிழில் பேசினார். இது, பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தமிழில் முதல்வர் பேசத் துவங்கியதும், மொழி பெயர்ப்பு வசதி எங்கே என்று பலரும் தேடியதை காண முடிந்தது. அதற்கு ஏற்ப, முன்கூட்டியே மொழிபெயர்ப்பு வசதியும் செய்யப்பட்டிருந்த தால், முதல்வரின் பேச்சை அனைவரும் புரிந்து கொள்ளவும் முடிந்தது. சரியாக மதியம் 2:42 மணிக்கு துவங்கிய முதல்வரின் உரை, 7 நிமிடங்க ளுக்கு நீடித்தது.அனைவருக்குமே இந்த அளவு மட்டும்தான் நேரம் என்பதால், முதல்வர் மள மளவென வாசித்து முடித்து விட்டார். உள்ளரங்கிற்குள் தலைமை செயலர் முருகானந்தம் மட்டுமே, முதல்வருக்கு உதவியாக இருந்தார். பத்திரிகையாளர்கள் உட்பட மற்ற யாருக்கும் அனுமதி இல்லை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 48 )

Ram
மே 29, 2025 21:24

பத்து நிமிசம் பேசற தானே பேச்சு...


Thiyagarajan S
மே 28, 2025 06:51

விடுங்கய்யா விடுங்கய்யா நாலு நிமிஷம் எழுதி வச்சதை தப்பு இல்லாம பேசுனது பெருசு விடுங்கய்யா விடுங்கய்யா.. நம்ம புள்ள தான் விடுங்கய்யா


Anantharaman Srinivasan
மே 26, 2025 23:44

ஏழே நிமிடங்கள் பேசிய பேச்சை 7 ஏழு முறை பேசி Practice செய்தாராம்.


Manon
மே 26, 2025 21:03

Jalrah may break if you knock it heavily.


SUBRAMANIAN P
மே 26, 2025 13:40

தமிழில் பேசுவதால் தப்பில்லை. சிலர் ஹிந்தியில் பேசி இருக்கிறார்கள். ஆனால் ஒரு முதலமைச்சருக்கு ஆங்கிலமும் நன்றாக பேசத்தெரிந்திருக்க வேண்டும். மற்ற மொழிகள் தெரிந்திருப்பது கூடுதல் தகுதிகள். ஆனால் இவருக்கு தமிழே தகிடு தத்தம். நிர்வாகத்திறமையோ ஸீரோ. இவர்களைபோன்றவர்களை ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்தவர்களுக்கு மூளை எங்கிருக்கிறதோ என்ற சந்தேகமும் இருக்கிறது. ப்ச்... ஜெயலலிதா போல் வராது இதுபோன்ற விஷயங்களில்..


Barakat Ali
மே 25, 2025 18:36

தமிழில் பேசவே எழுதிக்கொடுக்க வேண்டிய நிலைமை .....


spr
மே 25, 2025 17:54

அரசியல்வியாதிகள் எவருமே பிறர் எழுதிக்கொடுக்க வாசிப்பவர்கள்தான் அப்பொழுதுதான் கோர்வையாகப் படிக்க முடியும் இல்லையேல் எதையாவது உளறி வம்பில் மாட்டிக் கொள்வார்கள். ஆனால் தான் சொல்ல விரும்பிய கருத்தை அனைவரும் புரிந்து கொள்ளத் தக்க மொழியில் பேசினால் மட்டுமே அறிவுடையவர்கள் அதனால் மட்டுமே தான் சொன்னதனால் சாதித்தது என்று சொல்லிக் கொள்ளலாம். தமிழைப் பரப்ப அம்மொழி அறியாதவர்களுக்கும் அம்மொழியைக் கற்றுக் கொடுக்க வேண்டும்.அதற்கு இந்தியா முழுவதும் தமிழ் பயிற்சி பள்ளிகளை உருவாக்க வேண்டும் பல்கலைக் கழகங்களில் தமிழ் இருக்கை உருவாக்க வேண்டும் தமிழைக் கற்பவருக்கு உதவித் தொகை அளிக்க வேண்டும்.


Sridhar
மே 25, 2025 16:05

படிக்கறதெல்லாம் சரி, அதுக்கு என்ன அர்த்தம்னு யாராவது கேட்டா அப்புறம் ஆபத்தாகிவிடும். நம்ம தான் பொது சிவில் சட்டம் அமல் படுத்தப்படும்னு படிச்ச ஆளாச்சே அதுல விசேஷம் என்னென்னா ரெண்டு மூணு பேர் எழுந்துவந்து தவறை சுட்டிகாட்டுறவரை நம்ம ஆளு என்ன விசயமனே புரியாம முழிச்ச முழி இருக்கே, அது ரொம்ப ஸ்பெசல். மொத்தத்தில இந்த நாலு ஆண்டுகளில் தமிழகம் சிரிப்பகமாக மாறிவிட்டது. ஆனால் ஏழை மக்கள் வயிற்றில் அடித்து அவ்வளவு பெரும் கொள்ளைகள் நடைபெறுவதை பார்க்கும்போது சிரிப்பதற்கும் சங்கடமாக இருக்கிறது.


JAYACHANDRAN RAMAKRISHNAN
மே 25, 2025 14:21

7 நாட்கள் டிவியில் விவாதம் நடத்த முதலமைச்சர் கருத்து கொடுத்து விட்டார். இனி 7 நாட்கள் மக்கள் மகிழ்ச்சியாக டிவி பார்க்கலாம். அந்த 7 நாட்களுக்கு பிறகு வழக்கம் போல நீ ஊர்ந்து சென்றாய் நான் குடை தூக்கி சென்றேன் நீ வெட்கித் தலைகுனி நான் தலை நிமிர்ந்து நடக்கிறேன் பேச்சுக்கள் ஆரம்பித்து விடும். தமிழ் பற்று இந்து எதிர்ப்பு மதச்சார்பின்மை போன்றவைகள் வழக்கம் போல நடக்கும். தமிழகத்தில் அனைவரும் தமிழ் மொழி புகழ்ந்து பேசுவார்கள். இதெல்லாம் இருக்கட்டும் தமிழ் மொழி இந்தி மொழி இதன் மீது காட்டும் பற்றினை சிறிதளவு தமிழக மக்களிடம் காட்டினால் நல்லது


GoK
மே 25, 2025 13:22

எழுதிக் கொடுத்ததை 7 நிமிடங்கள் படித்ததே பெரிய சாதனை.


புதிய வீடியோ