உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முதல்வர் ஸ்டாலினின் கபடநாடகம்; அண்ணாமலை காட்டம்

முதல்வர் ஸ்டாலினின் கபடநாடகம்; அண்ணாமலை காட்டம்

சென்னை: மும்மொழி கல்விக் கொள்கை விவகாரத்தில் உ.பி., முதல்வரின் பேச்சுக்கு பதிலளித்த தமிழக முதல்வரின் கருத்துக்கு பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். தங்கள் வாக்கு வங்கி ஆபத்தில் இருப்பதாக உணரும்போது, மொழி குறித்த பிளவுகளை உருவாக்க முயற்சிப்பதாக உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், தமிழக முதல்வர் ஸ்டாலினை மறைமுகமாக விமர்சித்து இருந்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=bw9e77ej&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவரது இந்தக் கருத்துக்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின், 'மொழி திணிப்பையும், ஆதிக்கத்தையும் எதிர்க்கிறோம். எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல. யோகி ஆதித்யநாத் வெறுப்பு குறித்து எங்களுக்குப் போதிக்க விரும்புகிறாரா?' என்று கூறியிருந்தார். இந்த நிலையில், முதல்வரின் இந்த கருத்துக்கு பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை; அரசியலமைப்பு மற்றும் கூட்டாட்சி கட்டமைப்பின் பாதுகாவலர் என்ற போர்வையில் முதல்வர் ஸ்டாலின் ஒரு மோசடியாளராக திகழ்கிறார். பொதுவாக, மோசடி செய்பவர்கள் பணக்காரர்களை குறிவைத்து ஏமாற்றுவார்கள். ஆனால், எந்தவித பாகுபாடும் இல்லாமல், பணக்காரர்களையும், ஏழைகளையும் தி.மு.க., ஏமாற்றுகிறது. தமிழக முதல்வரின் குடும்பத்தினர் நடத்தும் தனியார் பள்ளிகளில் 3 மொழிகள் கற்பிக்கப்படுவதும், ஆனால், அதனை அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு செயல்படுத்த எதிர்ப்பு தெரிவிப்பதும் ஒட்டுமொத்த நாட்டிற்கே தெரியும். எனவே தான், உங்களை கபட நாடகம் ஆடுபவர் என்று அழைக்கிறார்கள். ஆங்காங்கே தனது கட்சிக்காரர்கள் நடத்தும் நாடகங்களை, தமிழக மக்களின் குரல் என்று முதல்வர் ஸ்டாலின் நினைக்கிறார். தேவையற்ற விஷயங்களில் மக்களின் கவனத்தை திசைதிருப்பும் உங்கள் முயற்சிகள் அம்பலமாகி விட்டதை நீங்கள் உணரவில்லை என்பது துரதிஷ்டவசமானது. அறியாமை என்னும் பேரின்ப உலகில் நீங்கள் வாழுங்கள்; நாங்கள் தொந்தரவு செய்ய மாட்டோம், இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

venkateshan G A
மார் 27, 2025 17:12

லண்டன் போய் படித்து வந்தும் அண்ணாமலைக்கு அறிவு வளரவில்லையே


P. SRINIVASAN
மார் 27, 2025 16:56

நீயெல்லாம் பேசறதே தமிழ்நாட்டின் சாபம்.


Indian
மார் 27, 2025 16:40

நீங்கள் இருப்பது தமிழ்நாடு அதற்க்கு ஏற்றாற்போல் பேசுங்கள் சும்மா எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேச வேண்டாம்


GUNA SEKARAN
மார் 27, 2025 14:28

உத்திர பிரதேசத்தில் தமிழ் மூன்றாவது மொழி


T.sthivinayagam
மார் 27, 2025 14:20

முப்பது நாளில் ஹிந்தி படிக்க புத்தகம் வந்து முப்பது வருடம் ஆகிவிட்டது. உபி மாண்புமிகு முதல்வரோ அல்லது அமைச்சரோ யாராவது ஒருவர் தமிழில் பேசுவார்களா என பாருங்கள் அண்ணாமலை பையாஜி என்று மக்கள் பேசிக்கொள்கிறார்கள்


Guna Gkrv
மார் 27, 2025 13:39

அண்ணாமலை நீங்கள் இருப்பது தமிழ்நாடு அதற்க்கு ஏற்றாற்போல் பேசுங்கள் சும்மா எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேச வேண்டாம்


vivek
மார் 27, 2025 13:53

சிங்கப்பூரில் கருத்து வரும்போது தமிழ்நாட்டில் கருத்து வரக்கூடாதா குணா அவர்களே


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
மார் 27, 2025 13:54

அவர் சரியாகத்தான் பேசுகிறார்.... நீங்கள் தான் தமிழ்நாட்டை தனி நாடாக நினைத்து கொண்டு வாழ்கிறீர்கள்.....உங்களுக்கு வேண்டுமானால் இரு மொழி கொள்கை வைத்து அவர்களுக்கு அடிமையாக வாழுங்கள்.... நாங்கள் பல மொழி கற்று சுதந்திரமாக வாழ விரும்புகிறோம்....!!!


Suppan
மார் 27, 2025 17:23

தமிழ்நாடு பாரதத்தில்தான் இருக்கிறது என்ற எண்ணம் இருக்கட்டும். ஸ்டாலின் விடும் புருடாவெல்லாம் நம்புவது முரசொலி படிக்கும் உபிகள் மட்டுமே


Sivagiri
மார் 27, 2025 13:06

பிரைவேட் ஸ்கூல் எல்லாமே சிபிஎஸ்சி - க்கு மாறி விட்டன - அல்லது சில பள்ளிகள் இன்டெர்னசனல் சிலபஸ் என்று மாற்றி கொண்டன - - ஆனால் உள்ளூர் வாத்தியார்கள் டீச்சர்கள்தான் - எல்லாம் குறைந்த சம்பளத்துக்கு , தினமும் ஸ்கூலில் 10 மணி நேரம் , அதோடு , சிபிஎஸ்சி இன்டர்நேஷனல் சிலபஸ் , எல்லாம் , அன்றன்று வீட்டில் படித்து வந்து மறுநாள் சொல்லிக் கொடுக்கிறார்கள் . . . மாணவர்களுக்கு இருக்கும் மரியாதை சுதந்திரம் கூட ஆசிரியர்களுக்கு இருக்காது . . . தினமும் திட்டுகளும் , பனிஷ்மெண்டுகளும் ஆசிரியர்களுக்குத்தான் , இதெல்லாம் விட , பெண் ஆசிரியர்களுக்கு மேனேஜ்மேண்டுகள் மற்றும் மாணவர்களால் பாலியல் சேட்டைகளும் , சகித்துக் கொள்ள வேண்டி இருக்கு . . .


Suppan
மார் 27, 2025 17:19

அரசுப்பள்ளிகளிலும் பாலியல் தொல்லை உண்டு


veeramani hariharan
மார் 27, 2025 13:02

There is already three languages are being taught. No one demanded TAMIL language. If anybody demanded they Wil teach. They are nit against any language like T. N Politicians.


தமிழ் நிலன்
மார் 27, 2025 12:51

ஆங்கில அரசின் அடிமைகளாக திட்டத்தை சென்ற நூற்றாண்டில் இருந்தே திமுக கபட நாடகம் மூலம் செயல் படுத்தி வருகிறது. மக்களின் அறியாமையை காசாக்கும் டாஸ்மாக் திட்டம் ஒரு உதாரணம்


Chellasamy Rajendran
மார் 27, 2025 12:31

உத்தர பிரதேசத்தில் தமிழ் கற்பிக்கப்படுகிறதா? அங்கிருந்து வேலைக்கு வருபவர்கள் ஏன் ஒரு மொழியை மட்டும் கற்றுக்கொண்டு இங்கு வருகிறார்கள்? அண்ணாமலை பதில் சொல்வாரா?


ஆரூர் ரங்
மார் 27, 2025 12:53

2020 லிருந்து உ.பி யில் புதிய கல்விக் கொள்கைக்கு ஏற்ப மும்மொழி கல்வி உள்ளது. அதில் தமிழ் உட்பட 19 விருப்பப் பாட மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன.


Murugesan
மார் 27, 2025 13:33

கும்மிடிபூண்டி தாண்டி வடக்கில் என்ன நடக்கின்றது தெரியாதவர்கள்,முதல்ல தமிழகத்தில அரசு பள்ளி மாணவர்களுக்கான வாழ்கையில ஏன் விளையாடுகிறீர்கள், பணம் சம்பாதிக்க ஏழை மாணவர்களை தண்டிக்க எவனுக்கும் உரிமையில்லை, தமிழை அழித்தவர்கள்.


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
மார் 27, 2025 14:03

இங்கு தமிழை மட்டும் கற்றுக்கொண்டு இந்தியா முழுவதும் வேலைக்கு செல்லும் தமிழர்களை சவுகரியமாக மறந்து விடுகிறீரே தமிழ் பற்றாளரே....


S.Martin Manoj
மார் 27, 2025 14:45

ஆரூர் வட மாநிலங்களில் ஹிந்தி சமஸ்கிருதம் தவிர வேறு மொழிகளுக்கு ஆசிரியர்களே இல்லை சும்மா மும்மொழி பயிற்றுவிக்கப்படுகிறது என்று கதை சொல்லகூடாது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை