உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அவபிரசாரம் செய்ததால் பாடம் எதிர்க்கட்சியினருக்கு முதல்வர் பதிலடி

அவபிரசாரம் செய்ததால் பாடம் எதிர்க்கட்சியினருக்கு முதல்வர் பதிலடி

பெங்களூரு: ''கர்நாடகாவில் நடந்த மூன்று சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இது எங்கள் அரசின் சாதனை. தொண்டர்களின் உழைப்புக்கு கிடைத்த வெற்றியாகும்,'' என முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:காங்கிரஸ் அரசின் சாதனைகளை, மக்கள் ஆதரித்துள்ளனர். நான் உப்பரிகையில் அமர்ந்தவன் அல்ல. நிரந்தரமாக மக்களுடன் தொடர்பில் இருப்பவன். எங்கள் வாக்குறுதி திட்டங்களால், பயனாளிகள் மகிழ்கின்றனர்.கர்நாடகாவில் நடந்த மூன்று சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இது எங்கள் அரசின் சாதனை. தொண்டர்களின் உழைப்புக்கு கிடைத்த வெற்றியாகும்.பா.ஜ., மற்றும் ம.ஜ.த., தலைவர்கள், வாக்குறுதி திட்டங்கள் குறித்து, அவப்பிரசாரம் செய்தனர். பிரதமர் நரேந்திர மோடியே, வாக்குறுதி திட்டங்கள் குறித்து விமர்சித்தார். மஹாராஷ்டிராவில் பொய்யான விளம்பரம் அளித்தனர். இதற்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர்.இரண்டு கட்சிகளும், ராஜ்பவன் முதல் மத்திய விசாரணை அமைப்புகள் வரை, அனைத்தையும் தவறாக பயன்படுத்தி, என்னையும், என் குடும்பத்தின் மீதும் பொய்யான ஊழல் குற்றச்சாட்டை சுமத்தி, விசாரணையை எதிர்கொள்ளும்படி செய்தனர்.என்னை கட்டிப்போடும் வகையில் பா.ஜ., தலைவர்கள் என் மீதும், என் மனைவி மீதும் பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தினர். கர்நாடக மக்கள் கடந்த 40 ஆண்டுகள் என் அரசியலை கண்டனர். கூட்டணி கட்சிகளின் பொய்களை மக்கள் நம்பவில்லை என்பதற்கு, தேர்தல் முடிவே எடுத்து காட்டு. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

நிக்கோல்தாம்சன்
நவ 24, 2024 06:53

இது நீங்கள் கொட்டிய பணத்தின் ரிசல்ட் அய்யா , அதே போல பாஜக வாரிசு அரசியலை கைவிட வேண்டும் என்றதொரு பாடம் கருநாடக பாஜகவிற்கு கிடைத்திருக்கும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை