உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குழந்தைகள் தினம் கொண்டாட்டம்

குழந்தைகள் தினம் கொண்டாட்டம்

தங்கவயல்; ஆண்டர்சன் பேட்டை சுமதி நகரில் உள்ள மொரார்ஜி தேசாய் உறைவிடப் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.தங்கவயல் சட்ட சேவை சமிதி, வக்கீல்கள் சங்கம், மொரார்ஜி தேசாய் உறைவிடப் பள்ளி ஆகியவை இணைந்து குழந்தைகள் தின விழாவை நடத்தின.தங்கவயல் நீதிமன்ற நீதிபதி வினோத் குமார், வக்கீல்கள் சங்கத் தலைவர் ராஜகோபால் கவுடா, துணைத்தலைவர் மணிவண்ணன், மொரார்ஜி தேசாய் பள்ளி முதல்வர் நாகராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.மாணவர்களின் ஆடல், பாடல், நடனம், நாட்டிய கலை நிகழ்ச்சிகள் நடந்தன. போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

சிலைக்கு மாலை

நேரு பிறந்த நாளை முன்னிட்டு ராபர்ட்சன்பேட்டை கணேஷ் புரத்தில் உள்ள நேரு பூங்காவில் உள்ள அவரது சிலைக்கு நேதாஜி சேவா சங்கம், காந்தி காமராஜர் தேசிய மன்றம் சார்பில் அதன் நிர்வாகிகள் கிருஷ்ண மூர்த்தி, தசரதன், தாஸ், திருமுருகன், கருணாகரன் ஆகியோர் மாலைகள் அணிவித்தனர்; இனிப்புகள் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி