உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தலாய் லாமா தேர்வில் சீனாவுக்கு பங்கு கிடையாது: சொல்கிறார் அருணாச்சல் முதல்வர்

தலாய் லாமா தேர்வில் சீனாவுக்கு பங்கு கிடையாது: சொல்கிறார் அருணாச்சல் முதல்வர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இடா நகர்: '' அடுத்த தலாய் லாமா சுதந்திரமான சமூகத்தில் பிறந்திருப்பார். அவரை தேர்வு செய்வதில், சீனாவுக்கு எந்த பங்கும் இல்லை ,'' என அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டு கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளதாவது: https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=aaus7dr3&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தற்போதைய தலாய் லாமாவின் காலத்துக்கு பிறதே புதிய தலாய் லாமா தேர்வு செய்யும் பணி துவங்கும். 14வது தலாய் லாமா இன்னும் 40 ஆண்டுகள் வாழ வேண்டிக் கொள்கிறேன்.அவர் ஆரோக்கியமாக உள்ளார். 90 வது பிறந்த நாளின் போது கூட, 130 வயது வரை வாழ்வேன் என்று கூறியுள்ளார். இதற்காக நாம் வேண்டிக் கொள்வோம்.அடுத்த தலாய் லாமாவின் பிறப்பிடம் எது என்பதில் நிச்சயமற்ற தன்மை உள்ளது. அவர் சுதந்தரமான சமூகத்தில் இருந்து அவர் வருவார்.அடுத்த தலாய் லாமா தேர்வு விவகாரத்தில் சீனா ஏன் ஆட்சேபனை தெரிவிக்கிறது என தெரியவில்லை. அவர்களுக்கு என தனி கொள்கை உள்ளது. தலாய் லாமா நிறுவனங்கள், இமயமலை பகுதியிலும், திபெத்திலும் மட்டுமே அங்கீகாரம் பெற்றுள்ளது. இதில் சீனாவுக்கு எந்த பங்கும் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி