உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்திய எல்லையில் ராணுவ விமானஇயங்கு தளம் அமைத்து சீனா திமிர்த்தனம்!:

இந்திய எல்லையில் ராணுவ விமானஇயங்கு தளம் அமைத்து சீனா திமிர்த்தனம்!:

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : நம் அண்டை நாடான சீனா, லடாக் எல்லையை ஒட்டிய திபெத் பகுதியில் உள்ள பாங்காங் ஏரிக் கரையில், பிரமாண்ட ராணுவ விமான இயங்கு தளத்தை கட்டி வருவது, செயற்கைக்கோள் புகைப்படங்கள் வாயிலாக தெரியவந்துள்ளது. இந்தியா - சீனா இடையே பல ஆண்டுகளாக எல்லை பிரச்னை நிலவி வருகிறது. லடாக், அருணாச்சல பிரதேசம் பகுதிகளை ஒட்டிய எல்லைப் பகுதிகளை சீனா சொந்தம் கொண்டாட முயற்சிப்பதே பிரச்னைக்கு காரணம். கடந்த 2020ல் லடாக்கை ஒட்டிய கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் அத்துமீறி நுழைந்த சீன வீரர்கள், இந்திய வீரர்களால் விரட்டி அடிக்கப்பட்டனர். இரு தரப்பிலும் நடந்த மோதலால், ஐந்து ஆண்டுகளாக இரு நாட்டு உறவிலும் விரிசல் விழுந்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=exjt1aaj&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பிரதமர் மோடி - சீன அதிபர் ஷீ ஜின்பிங் சந்திப்பு, இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களின் பேச்சை தொடர்ந்து, எல்லைப் பகுதிகளில் இரு நாட்டு வீரர்களும் ரோந்து செல்ல ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, இந்தியா - சீனா இடையிலான உறவு மீண்டும் மலர்ந்துள்ளது. இரு நாடுகளும், நேரடி விமானப் போக்குவரத்தை இயக்கவும் ஒப்புக்கொண்டு உள்ளன. இந்நிலையில், லடாக்கை எல்லையை ஒட்டிய திபெத் பகுதியில் பாங்காங் ஏரிக் கரையில் பிரமாண்ட ராணுவ விமான இயங்கு தளத்தை கட்டும் பணியை சீனா மேற்கொண்டுள்ளது. கடந்த 2020ல் மோதல் நடந்த கல்வான் பள்ளத் தாக்கில் இருந்து, 110 கி.மீ., தொலைவில், இந்த விமான தளம் கட்டப்பட்டு வருவது, செயற்கைக்கோள் புகைப்படங்கள் வாயிலாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கட்டுப்பாட்டு மையம், வீரர்கள் முகாம், வெடி மருந்து சேமிப்பு கிடங்குகள் மற்றும் ரேடார் அமைப்புகள் என ராணுவத்துக்கு தேவையான அனைத்து அம்சங்களும் அடங்கிய அதி நவீன வசதிகளுடன் இந்த விமான தளம் கட்டப்பட்டு வருகிறது. இந்த தளத்தில், பல வளாகங்கள் மூடிய நிலையில் உள்ளன. இங்கு, நீண்ட துாரத்தில் இருக்கும் எதிரிகளின் இலக்குகளை மிகவும் துல்லியமாக தாக்கும் ஏவுகணை தளங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. மேற்பரப்பு மூடிய நிலையில் இருக்கும் தளங்களில் இருந்து தேவைப்படும் போது ஏவுகணைகள் பாயும் வகையில் அந்த வளாகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதிநவீன, 'ஹெச்.க்யூ., 9' வான் ஏவுகணை அமைப்புகளை இங்கு சீனா பதுக்கி வைக்கவும் திட்டமிட்டுள்ளது தெரியவந்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த புவிசார் நுண்ணறிவு நிறுவனமான ஆல் சோர்ஸ் அனாலிசிஸ், சீனாவின் இந்த புதிய கட்டுமானத்தை முதலில் கண்டுபிடித்துள்ளது. இங்குள்ளது போல், மற்றொரு ஏவுகணை தளத்தையும், திபெத்தின் கர் பவுண்டி பகுதியில் சீனா கட்டி வருவதையும், இந்த நிறுவனம் அம்பலப்படுத்தியுள்ளது. நம் இந்திய எல்லையில் இருந்து, 65 கி.மீ., தொலைவில் இந்த ஏவுகணை தளங்கள் கட்டப்பட்டுள்ளன. லடாக்கில், நம் அரசால் கட்டப்பட்ட நியோமா விமான நிலையத்துக்கு நேர் எதிரே, இந்த ஏவுகணை தளங்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது. அங்கும் பல ஏவுகணைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இரு மையங்களிலும், கட்டுமானப் பணிகள் முழு வீச்சில் நடந்து வரும் நிலையில், அவற்றை விரைவில் முடிக்க சீனா திட்டமிட்டு உள்ளது. இதனால், இந்திய - சீன எல்லை பகுதியில் பதற்றம் நிலவுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Narayanan Muthu
அக் 25, 2025 20:42

சீனாவின் திமிர்தனமா இல்லை நம்மவர்களின் கையாலாகாத்தனமா


visu
அக் 25, 2025 20:25

பேசாமல் கொஞ்ச காலம் அவசர நிலையை கொண்டுவந்து வெளிநாட்டு பிரச்சினைகளை சரிசெய்துவிட்டு சுதந்திரம் கொடுங்க


Varadarajan Nagarajan
அக் 25, 2025 20:03

நம்பகத்தன்மை இல்லாத நாடு சீனா. மற்ற ப்ராந்தியங்களை ஆக்கிரமிக்கும் மனோபாவமும் கொண்டது. தைவான், நேபால், பிலிப்பைன்சுக்கு சொந்தமான சில தீவுப்பகுதியில் என பிற இடங்களை ஆக்கிரமிப்பது பிறகு தனது என சொந்தம்கொண்டாடுவது என்ற மனப்பான்மை கொண்டது. இந்தியாவில் இருந்துகொண்டு வெளிநாடுகளில் இந்தியாவிற்கு எதிராக பிரச்சாரம் செய்து கொண்டுள்ளனர் காங்கிரஸ் தலைவர்கள். மக்கள்தான் இவர்களை இனம்கண்டு தவிர்க்க வேண்டும். அப்பொழுதுதான் நாமும் இந்தியாவும் முன்னேறமுடியும். உலக நாடுகளோடு போட்டியிடமுடியும்


Rathna
அக் 25, 2025 19:01

சீன போன்ற நாடுகளுக்கு வெளி நாடுகள் மட்டுமே எதிரி. ஆனால் நமக்கோ உள்நாட்டு மர்ம நபர்களும், வெளி நாட்டு பாக்கிஸ்தான், உறவு கொண்டே கெடுத்த பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் போன்றவர்கள் எதிரிகள். நாம் புவியியலை மாற்ற முடியாது. ஆனால் நாம் எல்லை பகுதிகளை பலப்படுத்தும் நடவடிக்கைகளை, ராணுவ கொள்முதலை பலப்படுத்தி வருகிறோம். சீனாவும் நம் மேல் படை எடுக்க வாய்ப்பில்லை. ஏன் என்றால் பல லக்ஷம் கோடி வியாபாரம் அதற்கு பாதிக்கப்படும். எந்த ஒரு வல்லரசும், அமெரிக்காவை போல தான் போரை தொடங்கி அசிங்க பட விரும்பாது. மற்றவர்களை தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கும். அதற்கு தகுந்த நடவடிக்கைகளை மோடி அரசும், தேசிய பாதுகாப்பு ஆலோசகரும், ராஜ்நாத் சிங்க்கும் எடுத்து வருகிறார்கள்.


அப்பாவி
அக் 25, 2025 15:33

ஹி.. ஹீ. சீனாவுக்குப் போக கிட்டக்க ஒரு ஏர்போர்ட். லடாக்கிலிருந்து நடந்தே கூட ஏர்போர்ட் போயிடலாம். சீனாக்காரன் எறங்கி நம்ன வழிக்கு வர்ரான்.


Gnana Subramani
அக் 25, 2025 14:14

இதே பாகிஸ்தான் செய்து இருந்தால் ஜீயும் பிஜேபியும் பொங்கி இருப்பார்கள். சீனா செய்வதால் வாய் மூடி இருக்கிறார்கள்


RAMESH KUMAR R V
அக் 25, 2025 13:18

இந்தியா தற்போது தேசப்பற்றுமிக்கவர்களின் கையில், எதையும் சமாளிக்கும் திறன் அவர்களிடம் உள்ளது.இந்தியாவின் இறையாண்மை என்றும் காக்கப்படும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். ஜெய் ஹிந்த் .


Anand
அக் 25, 2025 10:49

அவன் கட்டிக்கொள்ளட்டும், பதிலடியாக நாமும் கட்டி அவனுக்கு செக் வைப்போம்


கூத்தாடி வாக்கியம்
அக் 25, 2025 10:46

முதலில் சீனா பொருட்களை வாங்கி விற்கும் கட்டுப்படுத்த வேண்டும்.


Abdul Rahim
அக் 25, 2025 09:41

இதையும் பெருமையா பீத்திக்கங்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை