உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஏ.ஐ., தொழில்நுட்பத்தின் மூலம் தேர்தலில் குழப்பம் விளைவிக்க சீனா சதி

ஏ.ஐ., தொழில்நுட்பத்தின் மூலம் தேர்தலில் குழப்பம் விளைவிக்க சீனா சதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஏ.ஐ., தொழில்நுட்பத்தின் மூலம் இந்திய லோக்சபா தேர்தலில் குழப்பம் விளைவிக்க சீனா சதி திட்டம் தீட்டியிருப்பதாக ஒரு திடுக்க தவகல் வெளியாகி இருக்கிறது. மைக்ரோசாப்ட் நிறுவன தரப்பில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நாடு முழுவதும் ஒரு தகவல் பரவி உள்ளது. இந்தியா நாட்டின் ஜனநாயக திருவிழா வரும் ஏப்-19 ல் துவங்குகிறது. ஜூன் மாதம் வரை பல கட்டங்களாக இந்த ஓட்டுப்பதிவு நடக்கிறது. இந்த தேர்தலை பொறுத்தவரை சுவர்விளம்பரம், ஒலிபெருக்கி விளம்பரம் தாண்டி, சமூகவலை தளங்கள் முக்கிய இடம் பிடித்துள்ளது. வேட்பாளர்கள் , கட்சி தரப்பில் விளம்பரங்கள், மீம்ஸ், வீடியோ என பெரும் அளவில் மக்களை விரைவில் சென்றடைகிறது. நல்லதோ, கெட்டதோ விரைவில் இந்த வைரல் பல லட்சம் பேரை சென்றடைகிறது. இந்த வகையில் செயற்கை நுண்ணறிவு என்ற ( Artificial Intelligence ) A I தொழில்நுட்பத்ததால் குழப்பம் விளைவிக்க சீனா திட்டமிட்டுள்ளது. உலகம் முழுவதும் 64 நாடுகளில் இந்த ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தியாவில் ஏப்ரல் 19 துவங்கி 7 கட்டங்களாக லோக்சபாவுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

சைபர் குழுக்கள்

இந்நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் குழு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சீனாவின் ஆதரவு பெற்ற சைபர் குழுக்கள் 2024 ல் நடக்கும் பல்வேறு பொதுத்தேர்தல்களை குறிவைத்துள்ளது. இதற்கு வடகொரியாவின் ஆதரவும் உண்டு. இந்த தேர்தலின் போது நிலவும் பொதுக்கருத்தை தங்களுக்கு சாதகமாக மாற்றும் வகையில் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட தகவல்களை சமூக வலைதளங்களில் பரவ வைக்க அவர்கள் திட்டமிட்டு உள்ளனர். அமெரிக்கா, இந்தியா மற்றும் தென் கொரியா நாடுகளில் முக்கிய தேர்தல் நடைபெறுவதால், தனது நலனுக்கு பயனளிக்கும் வகையில் இதனை செயல்படுத்தும் திட்டத்தில் சீனா உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

சோதனை

இது தொடர்பாக மைக்ரோசாப்ட் அதிகாரிகள் கூறுகையில்,‛டீப் பேக்' மற்றும் நடக்காத நிகழ்வுகளை வைத்து உருவாக்கப்பட்ட தவறான மற்றும் மோசடி விளம்பரங்கள் மூலம் அரசியல் விளம்பரத்தை உருவாக்குவது பெரிய அச்சுறுத்தல் ஆகும். இதுபோன்ற தவறான விளம்பரங்கள் வேட்பாளர்கள் குறித்து தவறான தகவலை பொது மக்களிடையே பரப்பி அவர்களை தவறாக வழிநடத்தும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைதொடர்ந்து சோதனை செய்து வருகிறது. இது காலப்போக்கில் அந்நாட்டிற்கு பெரிய பயனளிக்கும். தைவானில் ஆதிக்கத்தை செலுத்துவதற்காக சீனா இதனை சோதித்து பார்த்துள்ளது. அங்கு போலியான தகவல்களை பரப்பியது. இவ்வாறு அவர் கூறினார்.

பிரதமர் மோடி கவலை

!கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரதமர் மோடி அளித்த ஒரு பேட்டியில் , ஏ.ஐ., தொழில்நுட்பம் ஆபத்தாக உள்ளது. இதில் மிக கவனமாக இருக்க வேண்டியுள்ளது என கவலை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Balasubramanian R
ஏப் 06, 2024 15:06

அரசியல் வாதிகளை மிஞ்ச யாரும் இல்லை! இடையில் மாட்டிக் கொண்டு அல்ல படுவது அப்பாவி மக்கள்!


GMM
ஏப் 06, 2024 13:50

கம்யூனிஸ்ட் சீனா, கோரோனா சீனா, செயற்கை சீனா என்று உருமாறி, உலகை அச்சுறுத்தி வருகிறது முதலில் இந்தியாவில் கம்யூனிஸ்ட் மற்றும் ஆதரவு கட்சிகள் கட்டு படுத்த / தடை செய்ய வேண்டும் எந்தவொரு விளம்பரம், பொது கருத்து யார் மூலம் என்று மத்திய அரசு அறிய ஒரு நிரந்தர தீர்வு / எண் கொடுக்க வேண்டும் ஒரு புறா டிவி திமுக சுமார் முப்பத்தி ஐந்து வெற்றி என்கிறது ஒரு ஆங்கில டிவி திமுக சுமார் இருபது என்கிறது கருத்து வேறுபாடு ஐந்து சதவீதம் மேல் இருந்தால், உள்நோக்க கருத்து என்று அபராதம் விதிக்க வேண்டும் அரசியல் சாசன நாட்டாமை ஒப்பு கொள்ள வேண்டும்


Lion Drsekar
ஏப் 06, 2024 13:38

சீனா ஏ ஐ இவைகள் எல்லாம் எங்களுக்கு தெரியாது எங்களுக்கு தெரிந்தது எல்லாம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வீட்டு வாசலில் கொளுத்தும் வெய்யிலில் வருவார்கள் அடுத்து அவர்களை நாம் சந்திப்பது அடுத்த தேர்தலில் மட்டுமே மற்றபடி இவர்களுக்கும் மக்களுக்கும் எந்த ஒரு தொடர்பும் இருக்காது பொது மக்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் எந்த ஒரு தொடர்பும் என்றைக்குமே இருந்ததே இல்லை , ஆனால் சுய தொழில் , அரசு வேலை என்று வியாபாரம் செய்பவர்களுக்குத்தான் எல்லா பிரச்சனையும் மற்றபடி யாருக்குமே எதுவுமே தெரியாது இதுதான் எங்கள் நிலைப்பாடு ஆகவே அதே நேரத்தில் வெளிநாடு குறிப்பாக நமது எதிரி நாடுகளில் இருக்கும் கட்சிகள் இங்கு அந்த நாட்டு சின்னத்தில் போட்டியிடுவார் நாங்களும் எதற்கு என்று தெரியாமல் வாக்களிப்ப்போம் வந்தே மாதரம்


DUBAI- Kovai Kalyana Raman
ஏப் 06, 2024 13:09

சீனால நம்மளும் பரப்புவோம் , அந்த நாட்டை கம்யூனிஸ்ட் அரசாங்கத்துக்கு எதிரா மக்களை மார்த்திவிடுவோம் ,


Anand
ஏப் 06, 2024 12:14

சீனா அப்படி ஏதும் கஷ்டப்பட தேவையில்லை, இங்குள்ள அவர்களின் கைக்கூலிகளே அந்த வேலையை செய்வார்கள்


Rajah
ஏப் 06, 2024 12:09

மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்தியாவில் உடனடியாக தடை செய்யப்பட வேண்டும் என்று அகில இந்திய அளவில் ஆர்ப்பாட்டங்கள் இந்திய கம்யூனிஸ்ட்களால் நடைபெறவுள்ளது அனைவரும் வருக யாரோ ஒருவன் சொன்னதற்காக சம்மந்தமே இல்லாமல் தூதரகத்தை முற்றுகை செய்தவர்கள் என்ற பெருமை நமக்குண்டு மத சார்பற்ற அனைவரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளவும் தாய் ரஷ்யா, தந்தை சீனா , மைத்துனன் கியூபா, பங்காளி பாகிஸ்தான், வதிவிடம் இந்தியா


Lion Drsekar
ஏப் 06, 2024 11:48

அந்த நட்டு கட்சிக்கே இங்கு தேர்தலில் நிற்க அங்கீகாரம் இருக்கும்போது ? வந்தே மாதரம்


மேலும் செய்திகள்