உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அருணாச்சலை ஒட்டி சீனா ஹெலிகாப்டர் தளம்: பதற்றம் அதிகரிப்பு

அருணாச்சலை ஒட்டி சீனா ஹெலிகாப்டர் தளம்: பதற்றம் அதிகரிப்பு

புதுடில்லி :அருணாச்சல பிரதேசத்தை ஒட்டி புதிய ஹெலிகாப்டர் தளத்தை சீனா அமைத்து வருவதால், இரு நாட்டு எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசம் மீது சீனா தொடர்ந்து உரிமை கோரி வருகிறது. இந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. கடந்த 2020ல் கால்வான் பள்ளத்தாக்கில் இந்திய - சீன ராணுவத்தினர் இடையே நடந்த மோதலுக்குப் பின், இரு நாட்டு உறவில் விரிசல் அதிகரித்தது. இந்த சூழலில், கடந்த ஏப்ரலில், வடகிழக்கு பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் உள்ள 30 இடங்களின் பெயர்களை சீனா மாற்றியதால், இந்த விரிசல் மேலும் அதிகரித்துள்ளது. தொடர் அத்துமீறலில் ஈடுபட்டு வரும் சீனாவின் நடவடிக்கையை, அவ்வப்போது மத்திய அரசு கண்டித்து வருகிறது. 'அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி' என கூறி, சீனாவின் செயல்களை இந்தியா நிராகரித்து வருகிறது. இந்நிலையில், அருணாச்சல பிரதேச எல்லையில் இருந்து 20 கி.மீ., தொலைவில், சீனாவுக்கு சொந்தமான இடத்தில், புதிய ஹெலிகாப்டர் தளத்தை அந்நாடு அமைத்து வருகிறது. அண்டை நாடான திபெத்தின் தன்னாட்சி பிராந்தியத்தில் உள்ள நியிஞ்சி மாகாணத்தில், கோங்கிரிகாபு ஆற்றின் கரையோரம் இந்த ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்பட்டு வருகிறது. செயற்கைக்கோள் படத்தில் ஹெலிகாப்டர் தளம் கட்டப்படுவது தெளிவாக பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டு டிச.,1ல் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் எந்த கட்டுமானமும் அங்கு இல்லை. அதே மாதம் 31ம் தேதி எடுக்கப்பட்ட படத்தில் நிலம் துப்புரவு செய்யப்பட்டது தெரிகிறது. கடந்த 16ம் தேதி எடுக்கப்பட்ட புகைப்படத்தில் புதிய ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்பட்டு வருவது தெளிவாக தெரிகிறது. இந்த ஹெலிகாப்டர் தளத்தில் 600 மீ., துாரத்துக்கு ஓடுபாதை அமைக்கப்பட்டுள்ளது. மலைப்பகுதிகளில் ஹெலிகாப்டர்கள் புறப்படுவதற்கு இது சாதகமாக இருக்கும் என கூறப்படுகிறது. ஹெலிகாப்டர்களை நிறுத்துவதற்கு மூன்று ஹேங்கர்கள் அமைக்கப்பட்டுள்ளன. விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு வசதி மற்றும் அது தொடர்பான கட்டமைப்புகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.அருணாச்சல பிரதேசத்தின் வால்பகுதியில், புதிய ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்படுவதால், இந்த விவகாரத்தில் தீவிர கவனம் செலுத்த ராணுவம் முடிவு செய்துள்ளது. சீனாவின் பீஜிங் எல்லையில், நம் நாட்டு உதவியுடன் 'சியாகாங்' என்னும் இரட்டை பயன்பாட்டு கிராமங்கள் நிர்மாணிக்கும் பணிகள் நடந்து வரும் சூழலில், எல்லையில் புதிய ஹெலிகாப்டர் தளம் கட்டப்பட்டு வருவது இரு நாட்டு எல்லையில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Lion Drsekar
செப் 19, 2024 11:46

ஜாதிக்கு, மதத்துக்கு, மொழிக்கு எதிராக செயல்பட்டு மக்களிடையே தினம் இனம் ஒரு நிலையற்ற சூழ்நிலையை உருவாகிவரும் மக்கள் தலைவர்கள் எல்லைக்குச் சென்று நாட்டைக்காக்காக்கும் பணியில் ஈடுபட்டு வரும் இராணுவ வீரர்களுடன் கூட்டு சேர்ந்து எதிர்ப்பைக் காட்டவேண்டும், குடியாட்சியில் முடியாட்சி பின்பற்றப்படுகிறது, ஆனால் வெளிநாட்டுப் போர் என்றால் குடியாட்சி பின்பற்றப்படுகிறது, முடியாட்சியைப்போலவே மன்னர்கள் குடும்பத்துடன் , தொண்டர்களுடன் சேர்ந்து எல்லைக்கு அப்பால் போர் செய்து அன்னியர்களை விரட்டவேண்டும் , ஒவ்வொரு நாளும் இனி எந்த ஒரு கருத்தும் பதிவு செய்யக்கூடாது என்று நினைப்பதுது, காரணம் எந்த ஒரு பயனும் இல்லை, மனம் கேட்கவில்லை, தினமலர் என்ற நாளிதழையும் தினம் வாங்கினாலும், நமது மனதில் உதிக்கும் கருத்துக்களை நாம் வாசிக்கும் தினமலருக்கு காணிக்கையாக செலுத்தி ஆசி பெறுகிறோம் என்ற மகிழ்ச்சியில் பகிர்கிறேன், வந்தே மாதரம்


நிக்கோல்தாம்சன்
செப் 19, 2024 08:08

புத்த மதம் என்று கூறி கிருஸ்துவத்தையும் இசுலாமையும் ஆதரிக்கும் திருமாவை அவரது ஆதரவாளர்களை அனுப்பி புத்த நாடான திபெத்தை விடுவிக்க போராட செய்யலாம்


N Sasikumar Yadhav
செப் 19, 2024 07:43

வெறும் வாயை மெல்லும் புள்ளிராஜா இன்டி கூட்டணி களவானிங்களுக்கு அவல் கொடுத்துவிட்டது . இந்த அவல்கூட பல்லையும் சேர்த்து மெல்லுவானுங்க


Mani . V
செப் 19, 2024 05:57

போகிற போக்கைப் பார்த்தால் சப்பை மூக்கன்கள் டெல்லி வரையிலும் வந்து விடுவான்கள் போலிருக்கிறது.


Kasimani Baskaran
செப் 19, 2024 05:36

அங்கு ஏவுகணைகளை இந்தியா நிறுத்தி வைப்பது நல்லது.


சூ சின்
செப் 19, 2024 01:01

இன்னும் சீன இறக்குமதியை அதிகப் படுத்துவோம். ஆத்மநிர்பார் நு ஜல்லியடிப்போம். காங்கிரஸ் தான் காரணம்னு கரிச்சுக் கொட்டுவோம்.


Kumar Kumzi
செப் 19, 2024 07:53

ஓசிகோட்டர் கொத்தடிமை கூமுட்ட இந்த சூழ்நிலைக்கு காரணமே கொங்கிரஸ் தான் சப்பை மூக்கன் சும்மா கொரங்கு வித்தை காட்டுகிறான் அவ்வளவு தான்


தாமரை மலர்கிறது
செப் 19, 2024 00:39

அருணாச்சலத்தை ஒட்டி தானே ஒழிய, அருணாச்சலத்தில் இல்லை. மக்கள் தவறாக புரிந்துகொள்ள வாய்ப்புண்டு. மோடி இருக்க பயமேன்? ஜெயசங்கர் இந்த பிரச்னையை பேசி தீர்த்துவிடுவார். எள்ளளவும் பயம் கொள்ள தேவை இல்லை.


Easwar Kamal
செப் 19, 2024 00:22

நம்ம ஆளுக்குத்தான் உலகம் சுத்த நேரம் சரியா இருக்கே. எப்படி இந்தியாவிலே நடக்கிறது பற்றி கவலை. இதே பாகிஸ்தான் செஞ்ச வரைஞ்சு கட்டி பேசுவானுங்க. பாகிஸ்தான் சண்டை இட்ட மக்கள் ஒட்டு கிடாய்க்கும். சீனா கூட சரிசம சண்டை போடா முடியாது அதனால தூதர்கல் விட்டு அறிக்கை விட்டுட்டு முடிஞ்சா எதிர் கட்சிதான் காரணம்னு சொல்லிக்கிட்டு எஸ்கேப் ஆயிர வேண்டியதுதான். கிறுக்கு பயலைகளும் இதை நம்பிகிட்டு அடுத்த 5 ஆண்டும் நமக்கே ஒட்டு.


Kumar Kumzi
செப் 19, 2024 07:57

ஓசிகோட்டருக்காக நாக்கை தொங்க போடுற ஓசிகோட்டர் கொத்தடிமைங்க இந்த பூமிக்கு பாரமா இருப்பதை விட சாவதே மேல்..


முக்கிய வீடியோ