மலையாள கரையோரம்கன்னடத்தில், ஒந்து மொட்டெய கதே, கருட கமன விருஷப வாகனா படத்தில், தன் திறமையான நடிப்பால், ராஜ் ெஷட்டி ரசிகர்களை பெற்றார். இந்த படங்களின் இயக்குனரும் இவரே. இவர் இயக்கி, நடித்த டோபி படம், மலையாளத்தில் டப்பிங் செய்து, திரையிடப்பட்டது. தற்போது அஜித் மாம்பள்ளி முதன் முறையாக இயக்கும், அந்தோனி வர்கீஸ் படத்தில், அவர் நடிக்கிறார். இது இவர் நடிக்கும், மூன்றாவது மலையாள படமாகும். அவர் கூறுகையில், ''நான் நடிக்கும் மலையாள படத்தின் படப்பிடிப்பு நடக்கிறது. இது தவிர டர்போ என்ற மலையாள படத்திலும் நடிக்கிறேன். இதில் மம்முட்டி, அபர்ணா பாலமுரளி நடித்துள்ளனர்,'' என்றார்.சண்டையில் கால் முறிவுஐந்து ஆண்டுகளாக, கன்னடத்தில் எந்த படத்திலும் தென்படாத சம்யுக்தா ஹெக்டே, தற்போது கிரீம் என்ற படத்தில் நாயகியாக நடிக்கிறார். சமீபத்தில் படத்தின் டிரெய்லர் வெளியானது. கதாபாத்திரம் குறித்து, சம்யுக்தாவிடம் கேட்ட போது, ''இதுவரை நான் நடித்திராத கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். படத்தில் ஆக்ஷன் ஹீரோயினாக தோன்றுகிறேன். சண்டை காட்சியின் போது, என் கால் முறிந்தது. ஐந்து ஆண்டுகளுக்கு பின், ஒரு நல்ல படத்தில் நடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது; படம் நன்றாக வந்துள்ளது. படத்தின் மீது நான் அதிகமான எதிர்பார்ப்பு வைத்துள்ளேன்,'' என்றார்.45 நாட்கள் படப்பிடிப்புநடிகை அத்விதி ஷெட்டி மற்றும் நடிகர் ராகேஷ் பிராதார் இணைந்து நடிக்கும், தீரா சாம்ராட் படம் திரைக்கு வர, தயார் நிலையில் உள்ளது. இது குறித்து படக்குழுவினர் கூறுகையில், ''சமீபத்தில் படத்தின் காதல் பாடல் வெளியிடப்பட்டது. நடிகர் துருவா சர்ஜா, பாடலை வெளியிட்டு வாழ்த்தினார். சஸ்பென்ஸ், திரில்லர் கதை கொண்டதாகும். 45 நாட்கள் துமகூரு, சித்ரதுர்கா, பெங்களூரு சுற்றுப்பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்துள்ளது. படத்துக்கு எந்த வெட்டும் இல்லாமல், சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளது. பிப்ரவரி 16ல் திரைக்கு வரும்,'' என்றார்.அமெரிக்காவில் இசை அமைப்புஅமெரிக்கா, அமெரிக்கா, நன்ன ப்ரீத்திய ஹுடுகி, முங்காரு மலே உட்பட, பல ஹிட் படங்களில், சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்தவர் இசை அமைப்பாளர் மனோ மூர்த்தி, தற்போது மீண்டும் காதல் பாடல்களுடன் வந்துள்ளார். பிரணயம் என்ற படத்தில் இசை அமைத்துள்ளார். இது தொடர்பாக, படக்குழுவினரிடம் கேட்ட போது, ''படத்தின் பாடல்கள் சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. ரொமான்டிக், மிஸ்ட்ரி, திரில்லர் கதை கொண்ட படத்தில், ஆறு பாடல்கள் உள்ளன. அனைத்தும் அற்புதமானது. இவற்றை சோனு நிகம், கைலாஸ் கேர், ஹேமந்த் பாடியுள்ளனர். இப்போது அமெரிக்காவில் வசிக்கும் மனோ மூர்த்தி, அங்கிருந்தே இசை அமைத்துள்ளார். பெரும்பகுதி படப்பிடிப்பு அமெரிக்காவில் நடந்தது,'' என்றார்.காதலர் மாதத்துக்கு ஹலோநடிகை ராதிகா பண்டித், சில ஆண்டுகளாக நடிப்பை விட்டு ஒதுங்கியுள்ளார். ரசிகர்கள் எவ்வளவோ வேண்டியும், படங்களில் நடிக்கவில்லை. 2019ல் திரைக்கு வந்த ஆதிலட்சுமி புராணா படத்தில் நடித்திருந்தார். அதன்பின் அவரை திரையில் பார்க்க முடியவில்லை. அதற்காக ரசிகர்களை விட்டு விலகவில்லை. சோஷியல் மீடியா வழியாக, எப்போதும் அவர்களுடன் தொடர்பில் உள்ளார். இரண்டு நாட்களுக்கு முன், இன்ஸ்டாகிராமில், சில போட்டோக்களை வெளியிட்டுள்ளார். அதன் கீழே, 'காதலர் மாதத்துக்கு ஹலோ' எழுதியுள்ளார். போட்டோக்கள் வேகமாகி பரவுகிறது. அவர், காதலர் தின கொண்டாட்டத்துக்கு தயாராவதை போட்டோக்கள் காண்பிக்கிறது.புரட்டி போட்ட வாழ்க்கைகன்னடத்தில் மாறுபட்ட கதை கொண்ட படங்கள், அவ்வப்போது திரைக்கு வருகின்றன. இந்த வரிசையில் சேர வந்துள்ளது சப்ளையர் சங்கர். கதை குறித்து படக்குழுவினர் கூறுகையில், ''பாரில் சப்ளையராக வாழ்க்கை நடத்தும் சங்கர், யாருமில்லாதவர். இவருக்கு புன்யா என்ற பெண் அறிமுகமாகிறார். இது காதலாக மாறியது. புன்யாவை திருமணம் செய்து கொண்டு, தனக்கென குடும்பத்தை அமைத்துக்கொண்டு வாழ்கிறார். அப்போது நடக்கும் ஒரு சம்பவம், இவர்களின் வாழ்க்கையை புரட்டி போடுகிறது. அதுவரை அமைதியானவனாக இருந்த சங்கர், அதன்பின் வன்முறையாளராக மாறுகிறார். இறுதியில் என்ன நடக்கிறது என்பதே, கதையின் சாராம்சம்,'' என்றார்.