உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராஜ்நாத் சிங்கை சந்தித்தார் சீன ராணுவ அமைச்சர்

ராஜ்நாத் சிங்கை சந்தித்தார் சீன ராணுவ அமைச்சர்

புதுடில்லி, லடாக்கில் பிரச்னைக்குரிய எல்லை பகுதியில் இருந்து இந்திய ---- சீன ராணுவ படைகள் விலக்கிக்கொள்ளப்பட்ட பின், முதன் முறையாக இரு நாட்டு ராணுவ அமைச்சர்களும் லாவோசில் நேற்று சந்தித்து பேசினர். லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் 2020ல் இந்தியா - சீன ராணுவத்தினர் இடையே மோதல் வெடித்தது. இந்த சண்டைக்கு பின் இரு தரப்பு உறவில் விரிசல் ஏற்பட்டது. கடந்த நான்கு ஆண்டுகளாக ராணுவ மற்றும் துாதரக அளவிலான பேச்சுகள் தொடர்ந்தன. அதன் விளைவாக கல்வான் பள்ளத்தாக்கில் 2020க்கு முந்தைய நிலையை பராமரிப்பது என இரு நாடுகளும் கடந்த அக்டோபரில் ஒருமித்த முடிவை எட்டின.இந்திய -- சீன எல்லையில் பிரச்னைக்குரிய கடைசி இரண்டு பகுதிகளில் இருந்தும், இரு தரப்பினரும் தங்கள் படைகளை சமீபத்தில் விலக்கிக் கொண்டனர். இந்நிலையில், நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், 'ஆசியான்' மாநாட்டில் பங்கேற்பதற்காக, தென்கிழக்கு ஆசிய நாடான லாவோசுக்கு நேற்று சென்றார். அங்கு தலைநகர் வியன்டியானில் சீன ராணுவ அமைச்சர் டாங் ஜுனை சந்தித்து பேசினார். எல்லையில் இரு நாட்டு ராணுவமும் படைகளை விலக்கிக் கொண்ட பின் நடந்த உயர்மட்ட அளவிலான சந்திப்பு என்பதால், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இருவரும் எல்லையில் நீடிக்கும் நிலைமை குறித்து தங்களின் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை