உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நடன இயக்குனர் பாலியல் புகாரில் கைது

நடன இயக்குனர் பாலியல் புகாரில் கைது

ஹைதராபாத்: தமிழில், நடிகர் விஜயின் வாரிசு, ரஜினியின் ஜெயிலர் உள்ளிட்ட ஏராளமான படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றியவர் ஜானி. ஆந்திராவைச் சேர்ந்த இவர், தெலுங்கு நடன இயக்குனர்கள் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார். இந்நிலையில், படப்பிடிப்பின் போது உடன் பணியாற்றிய நடன பெண் ஒருவருக்கு நடன இயக்குனர் ஜானி பாலியல் தொல்லை தந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அப்பெண் தெலுங்கானா போலீசில் சமீபத்தில் புகார் அளித்தார்.அதில், 'வெளிப்புற படப்பிடிப்புகளில் அவர் எனக்கு பலமுறை பாலியல் தொல்லை தந்தார்' என்று கூறியிருந்தார்.இதையடுத்து ஜானி மீது, 'போக்சோ' உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிந்த தெலுங்கானா போலீசார், கோவாவில் அவரை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ