உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வீராங்கனா காப்பகத்தில் சிவிங்கிபுலிகள் விடுவிப்பு

வீராங்கனா காப்பகத்தில் சிவிங்கிபுலிகள் விடுவிப்பு

போபால்: மத்திய பிரதேசத்தில், குனோ தேசிய பூங்காவில் இருந்து கொண்டு வரப்பட்ட இரண்டு சிவிங்கிபுலிகள், வீராங்கனா துர்காவதி புலிகள் காப்பகத்தில் நேற்று விடுவிக்கப்பட்டன. ம.பி.,யில் முதல்வர் மோகன் யாதவ் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, சிவிங்கிபுலி பாதுகாப்பு திட்டத்தின் கீழ், ஷியோபூர் மாவட்டத்தின் குனோ தேசிய பூங்காவில் இருந்து கொண்டு வரப்பட்ட, ‘வியோம், நீரா’ என, பெயரிடப்பட்ட இரண்டு சிவிங்கிபுலிகளை, சாகர் மாவட்டத்தின் வீராங்கனா துர்காவதி புலிகள் காப்பகத்தில், முதல்வர் மோகன் யாதவ் நேற்று விடுவித்தார். இதன் மூலம், குனோ தேசிய பூங்கா, காந்தி சாகர் வனவிலங்கு சரணாலயத்தை தொடர்ந்து, இந்த புலிகள் காப்பகம் மாநிலத்தின் மூன்றாவது சிவிங்கிபுலி வாழ்விடமாக உருவெடுத்துள்ளது. நவுராதேஹி புலிகள் காப்பகம் என்றழைக்கப்படும் வீராங்கனா துர்காவதி புலிகள் காப்பகம், சாகர், தாமோ, நரசிங்பூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் பரந்து விரிந்து, 2,339 சதுர கி.மீ., பரப்பளவை கொண்டுள்ளது. இது, ம.பி.,யின் மிகப்பெரிய புலிகள் காப்பகமாகும். சிவிங்கிபுலிகள் புதிய சூழலுக்கு ஏற்றவாறு தங்களை பழக்கப்படுத்த, நவீன, ‘போமா’ அடைப்புகள் மற்றும் கண்காணிப்பு வசதிகளுடன், 439 ஹெக்டேர் பரப்பளவில், இந்த காப்பகத்தில் பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ