உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பயங்கரவாதிகளுடன் சண்டை: ராணுவ வீரர் பலி

பயங்கரவாதிகளுடன் சண்டை: ராணுவ வீரர் பலி

உதம்பூர்: ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில், நம் ராணுவ வீரர் வீர மரணம் அடைந்தார். ஜெய்ஷ் - இ - முகமது அமைப்பைச் சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். ஜம்மு - காஷ்மீரின் உதம்பூரில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறை அளித்த தகவலின்படி, உள்ளூர் போலீசார் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் நேற்று சோதனை நடத்தினர். தோடா - உதம்பூர் எல்லையில் கிஷ்துவார் வனப்பகுதியில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படை வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். பதிலுக்கு, பாதுகாப்பு படையினரும் திருப்பி சுட்டனர். பல மணி நேரம் இந்த சண்டை நீடித்தது. இதில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், ராணுவ வீரர் ஒருவர் படுகாயமடைந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். துப்பாக்கிச் சூடு நடந்த பகுதியில் பதுங்கியிருந்த ஜெய்ஷ் - இ - முகமது அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் நான்கு பேரை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். மேலும் பலர் அப் பகுதியில் பதுங்கியிருக்க வாய்ப்பிருக்கலாம் என்பதால், அப்பகுதியில் தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது. இதற்கிடையே, பயங்கரவாதம் தொடர்பான வழக்கில் ஸ்ரீநகர், பாரமுல்லா, அனந்த்நாக், குப்வாரா, புல்வாமா மற்றும் ஷோபியன் மாவட்டங்களில் 7 இடங்களில் ஜம்மு - காஷ்மீர் போலீசார் சோதனை நடத்தினர். சமூகவலைதளம் வாயிலாக பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாக வந்த புகார் அடிப் படையில் நடந்த சோதனையில் டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் ஆவணங்கள் கைப் பற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ