உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 8வது முறையாக துாய்மை நகரம் விருதை வென்றது இந்தூர்; சென்னைக்கும் விருது

8வது முறையாக துாய்மை நகரம் விருதை வென்றது இந்தூர்; சென்னைக்கும் விருது

புதுடில்லி: தூய்மையான நகரங்கள் பட்டியலில் மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரம் 8வது முறையாக முதலிடத்தை பிடித்துள்ளது. தலைநகரங்களின் பிரிவில் சென்னைக்கும் விருது வழங்கப்பட்டுள்ளது.'சுவச் சுவேக்ஷான்' திட்டத்தின் கீழ், கடந்த 2016ம் ஆண்டு முதல் இந்தியாவின் தூய்மை நகரங்கள் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2024 மற்றும் 2025ம் ஆண்டுக்கான பட்டியலை ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டார். குப்பைகளை கையாளுதல், பிளாஸ்டிக் கழிவுகளை குறைத்தல், நிர்வகித்தல், மறுபயன்பாடு, மறு சுழற்சிசெய்தல் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து தூய்மை நகரங்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டது.தேசிய அளவில் தூய்மையான நகரங்கள் பட்டியலில் தொடர்ந்து 8வது ஆண்டாக ம.பி.,யின் இந்தூர் முதலிடம் பிடித்துள்ளது. 2வது இடத்தில் சத்தீஸ்கரின் அம்பிகாபூரும், 3வது இடத்தில் கர்நாடகாவின் மைசூருவும் இடம்பிடித்துள்ளன.வெற்றி பெற்ற மாநகர நிர்வாகங்களுக்கு டில்லி விஞ்ஞான் பவனில் நடந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.

மிகப்பெரிய தூய்மையான நகரங்கள் ( 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை)

தூய்மையான நகரம்; ஆமதாபாத், குஜராத், அதிவேகமாக வளர்ச்சியடையும் நகரம் ; ராய்ப்பூர், சத்தீஸ்கர்,மக்களின் நன்மதிப்பு பெற்ற நகரம்; நவி மும்பை, மஹாராஷ்டிரா,புதிய திட்டங்களை செயல்படுத்தும் நகரம்; ஜபல்பூர், மத்திய பிரதேசம்,திடக்கழிவு மேலாண்மையில் சிறந்த நகரம்;சூரத், குஜராத்,

தூய்மையான நடுத்தர நகரங்கள் (3 லட்சம் முதல் 10 லட்சம் மக்கள் தொகை)

தூய்மையான நகரம்; உஜ்ஜயின், மத்திய பிரதேசம்அதிவேகமாக வளர்ச்சியடையும் நகரம் ; மதுரா - பிருந்தாவன், உத்தரபிரதேசம்மக்களின் நன்மதிப்பு பெற்ற நகரம்; சந்திரபூர், மஹாராஷ்டிராபுதிய திட்டங்களை செயல்படுத்தும் நகரம்; ஜான்சி, உத்தரபிரதேசம்,திடக்கழிவு மேலாண்மையில் சிறந்த நகரம்; லத்தூர், மஹாராஷ்டிரா

தூய்மையான சிறிய நகரங்கள் (1 லட்சம் முதல் 3 லட்சம் மக்கள் தொகை)

தூய்மையான நகரம்; டில்லி மாநகராட்சி, டில்லி, அதிவேகமாக வளர்ச்சியடையும் நகரம் ; ஒராய், உத்தரபிரதேசம்,மக்களின் நன்மதிப்பு பெற்ற நகரம்; திருப்பதி, ஆந்திர பிரதேசம்,புதிய திட்டங்களை செயல்படுத்தும் நகரம்; திவாஸ், மத்திய பிரதேசம்,திடக்கழிவு மேலாண்மையில் சிறந்த நகரம்; நாகடா, மத்திய பிரதேசம்,

தூய்மையான தலைநகரங்கள்

தூய்மையான தலைநகரம்; போபால், மத்திய பிரதேசம், அதிவேகமாக வளர்ச்சியடையும் நகரம் ; சென்னை, தமிழகம்,மக்களின் நன்மதிப்பு பெற்ற நகரம்; ராஞ்சி, ஜார்க்கண்ட்,புதிய திட்டங்களை செயல்படுத்தும் நகரம்; மும்பை, மஹாராஷ்டிராதிடக்கழிவு மேலாண்மையில் சிறந்த நகரம்;சண்டிகர், சண்டிகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

S Kumar
ஜூலை 23, 2025 10:08

எந்த இடத்திற்கு போனீர்கள் 200


என்றும் இந்தியன்
ஜூலை 17, 2025 17:04

இந்தோருக்கு கிடைத்தது தூய்மை நகர விருது. சென்னைக்கு கிடைத்தது


Kasimani Baskaran
ஜூலை 17, 2025 16:25

அதெப்படி... கூவத்துக்கு சேலை கட்டி மறைத்து விட்டார்களா?


saravanan
ஜூலை 17, 2025 16:23

பெருகி வரும் மக்கள் தொகை ஒருபுறம். அதனால் அருகி வரும் சுகாதாரம் மறுபுறம் இந்தியா என்றாலே சுத்தம் இல்லாத நாடு என்ற கருத்து வெகு ஆண்டுகளாக அன்னிய நாடுகளின் பார்வையில் நிலவி வந்தது. நமது நாட்டின் அந்த நிலையை மாற்றி காட்டிய பெருமை பிரதமர் மோடி அவர்களையே சேரும். ஸ்மார்ட் சிட்டி திட்டம், அம்ருத் பாரத் திட்டம் 2.0, ஸ்வச் பாரத் போன்ற சுகாதாரம் மற்றும் சுத்தம் சார்ந்த திட்டங்களால் இந்தியா நிச்சயம் ஒரு தூய்மை தேசமாக மாறிக்கொண்டிருக்கிறது கடந்த பதினோரு ஆண்டுகால பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியின் சாதனைக்கு நாடு தூய்மை அடைவதும் மிகப்பெரிய சாதனையே


Karthik Madeshwaran
ஜூலை 17, 2025 14:21

மேற்கூறிய புள்ளி விவரங்கள் எதை வைத்து எடுக்கிறார்கள் ? ஆமதாபாத் தூய்மையான நகரமா அய்யோயோ ? யார்கிட்ட காது குத்துறீங்க ? மனசாட்சி வேணாமா ? கொடுமை.


G P RAJAGOPALAN
ஜூலை 17, 2025 14:39

நீ அங்க போனியா?


Karthik Madeshwaran
ஜூலை 17, 2025 15:41

ஆமா கோவாலு... அதான் சொல்றேன்.


Keshavan.J
ஜூலை 17, 2025 16:15

மட ஈஸ்வர நீ என்ன பெரிய அறிவாளியா ட்ராவிடிய பெல்லொவ் மாதிரி பேசாதே. நீ எங்காவது அஹமதாபாத் போயிருக்கியா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை