உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விண்வெளியிலும் சுத்தம்: வெற்றிகரமாக சாதித்தது இந்தியா

விண்வெளியிலும் சுத்தம்: வெற்றிகரமாக சாதித்தது இந்தியா

- நமது நிருபர் - சர்வதேச விண்வெளி கொள்கையை பின்பற்றி, விண்வெளிக்கு அனுப்பிய ராக்கெட்டின் மேல்பாகத்தை, ஒன்பது மாதங்களில் பூமிக்கு திருப்பி விண்வெளியை சுத்தமாக பராமரித்து, இந்தியா சாதனை படைத்துள்ளது. கடந்தாண்டு நவ., 2ல், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து, 'எல்.வி.எம்., 3 -- எம்5' ராக்கெட்டின் வாயிலாக, 'சி.எம்.எஸ் - 3' தகவல் தொடர்பு செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. செயற்கைக்கோள் பிரிக்கப்பட்ட பின், விபத்து ஏற்படாத வகையில், அந்த ராக்கெட்டின் மேல்பகுதி, சுற்றுப்பாதையில் சுற்றிக் கொண்டிருந்தது. அதன் சுழற்சி, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள எம்.ஓ.டி.ஆர்., 'ரேடார்' வாயிலாக கண்காணிக்கப்பட்டது. அது, படிப்படியாக விண்வெளியில் இருந்து பூமியை நோக்கி வந்தது. அப்போது, வளி மண்டல காற்றுடன் உரசியதால் ஏற்பட்ட வெப்பத்தால், பெரும்பாலான பாகங்கள் எரிந்து சாம்பலாயின. மீதமிருந்த சில பாகங்கள் மட்டும், கடந்த ஜூலை 30ம் தேதி, அட்லாண்டிக் பெருங்கடலில் விழுந்ததை, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான 'இஸ்ரோ' உறுதி செய்துள்ளது. வழக்கமாக, செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்திய பின், ராக்கெட்டின் பாகங்கள், 10 ஆண்டுகளுக்கு மேல், விண்வெளி கழிவுகளாக சுற்றிக் கொண்டே இருக்கும். இந்த கழிவுகள், ஏவப்படும் செயற்கைக்கோள்களின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தும். அதை தவிர்க்கும் வகையில், சரியான திட்டமிடலால், வெறும் ஒன்பது மாதங்களிலேயே, ராக்கெட்டின் மேல்பாகத்தை பூமிக்கு கொண்டு வந்து, இஸ்ரோ அழித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Alphonse Mariaa
ஆக 15, 2026 07:01

தேவை இல்லத்த ஏவுதல்களை தடை செய்ய வேண்டும். முன்னேற்பாடு செய்யப்பட்ட சில ராக்கெட் மட்டும் அனுமதிக்க வேண்டும். பூமியின் சுற்று வட்ட பாதை மற்றும் விண்வெளி குப்பை கூடம் அல்ல.


Kasimani Baskaran
ஆக 14, 2026 03:57

ராடார் மூலம் கண்காணித்து மீதிப்பாகம் அழிந்து விட்டதை உறுதி செய்வது சிறப்பு.. விரைவாக லேசர் மூலம் அழிக்கும் திறனும் கொண்டு வந்தால் இன்னும் நல்லது. இல்லை என்றால் விமானம் போகும் பாதையில் இவை விழுந்தால் ஆபத்துண்டு.


M Ramachandran
ஆக 14, 2026 02:16

இந்த முன்னேற்றத்தின் அக்கறையால் தான் பல நாடுகள் நம் நாட்டின் மேல் வயிற்றெரிச்சல் படுகிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை