உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மேக வெடிப்பு பலி எண்ணிக்கை 60 ஆக உயர்வு; 500 பேர் மாயம்

மேக வெடிப்பு பலி எண்ணிக்கை 60 ஆக உயர்வு; 500 பேர் மாயம்

கிஷ்துவார்: ஜம்மு - காஷ்மீரில் மேக வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை, 60 ஆக உயர்ந்துள்ளது. மாயமான 500க்கும் மேற்பட்டோரை தேடும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டு உள்ளனர். வெள்ளப்பெருக்கு ஜம்மு - காஷ்மீரின் கிஷ்துவார் மாவட்டத்தில் உள்ள சிசோட்டி கிராமத்தில், நேற்று முன்தினம் மதியம் திடீர் மேகவெடிப்பால் கனமழை பெய்தது. இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக கொட்டிய கனமழையால், சிசோட்டியை ஒட்டிய மலைப்பாதையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அங்கிருந்த கடைகள், வீடுகள், ஹோட்டல்கள் உள்ளிட்டவை அடித்துச் செல்லப்பட்டன. சேறும், சகதியுமாய் பெருக்கெடுத்த நீரில், வாகனங்களும் அடித்துச் செல்லப்பட்டன. சிசோட்டியில் இருந்த பஸ் நிலையம், பாதுகாப்பு மையம் போன்றவையும் வெள்ளத்தில் சிக்கின. சிசோட்டி கிராமம் வழியாக இமயமலையை ஒட்டியுள்ள மச்சைல் மாதா கோவிலுக்கு பாத யாத்திரையாக செல்ல திரண்டிருந்த ஏராளமானோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. இதில், 48 உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், 21 பேரின் உடல்கள் அடையாளம் காணப் பட்டுள்ளன. இதுவரை 160க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். இதில், 38 பேரின் உடல்நிலை மோசமாக இருந்ததால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. பேரழிவு பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணியில் ராணுவ வீரர்கள், துணை ராணுவத்தினர், தேசிய மற்றும் மாநில பே ரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். சிசோட்டி கிராமம் முதல் வெள்ளம் பாதித்த பகுதி வரை மாயமான 500க்கும் மேற் பட்டோரை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது. நடவடிக்கை இதற்கிடையே, மேகவெடிப்பால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து ஜம்மு - காஷ்மீர் துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹா, முதல்வர் ஒமர் அப்துல்லா ஆகியோரிடம் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தகவல் கேட்டறிந்தார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த உத்தரவிட்ட அவர், இந்த இக்கட்டான தருணத்தில் தேவையான உ தவிகளை வழங்க மத்திய அரசு தயாராக உள்ளதாக உறுதியளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை