வாசகர்கள் கருத்துகள் ( 1 )
தொழிலாளர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட இறைவனை வேண்டுகிறேன்
டேராடூன்: உத்தரகண்டில் ஏற்பட்ட மேகவெடிப்பில், கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் ஹோட்டல் தளத்தில் தங்கியிருந்த தொழிலாளர் 9 பேர் மாயம் ஆகி உள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.உத்தரகண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள பர்கோட்-யமுனோத்ரி சாலையில் உள்ள பாலிகரில் மேக வெடிப்பு ஏற்பட்டது. குறைந்த நேரத்தில் மேகங்கள் கூடி, வீரியம் மிக்க மழை பொழிந்தால் அதுவே மேகவெடிப்பு எனப்படும். இந்த அதீத மழை பொழிவால் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு போன்றவை நிகழ்கிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=rztu1vtk&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மேகவெடிப்பில், கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் ஹோட்டல் தளத்தில் தங்கியிருந்த தொழிலாளர் 9 பேர் மாயம் ஆகி உள்ளனர். சம்பவ இடத்திற்கு மாநில பேரிடர் மீட்புப் படை, தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் போலீசார் விரைந்துள்ளனர். தற்போது தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.
தொழிலாளர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட இறைவனை வேண்டுகிறேன்