உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நிலக்கரி ஊழல் வழக்கு; மதுகோடா மனுவை தள்ளுபடி செய்த டில்லி கோர்ட் !

நிலக்கரி ஊழல் வழக்கு; மதுகோடா மனுவை தள்ளுபடி செய்த டில்லி கோர்ட் !

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி:நிலக்கரி ஊழல் வழக்கில்,தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி, ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மது கோடா தாக்கல் செய்த மனுவை டில்லி உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த 2006 செப்டம்பரில் இருந்து 2008 ஆகஸ்ட் வரை, மதுகோடா முதல்வராக இருந்தார். அப்போது தனது அதிகாரத்தை பயன்படுத்தி, நிலக்கரி சுரங்கங்களை மேற்குவங்கத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு முறைகேடாக ஒதுக்கீடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன்பேரில், மதுகோடா, நிலக்கரித்துறை முன்னாள் செயலர் குப்தா, முன்னாள் ஜார்க்கண்ட் தலைமை செயலர் பாசு, கோடாவின் நெருங்கிய உதவியாளர் விஜய் ஜோஷி,நிலக்கரித்துறை செயலர் ஹரிஷ் சந்திரா உள்ளிட்ட 15 பேர் மீதான வழக்கு, டில்லி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கோல்கட்டாவை சேர்ந்த நிறுவனமான வினி அயர்ன் அண்ட் ஸ்டீல் உத்யோக் லிமிடெட் .யுபிஏ கால நிலக்கரி ஊழலில் விசுல், கோடா மற்றும் குப்தாவுக்கு முறையே ரூ.50 லட்சம், ரூ.25 லட்சம் மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது.பாசுவுக்கு ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.அவர்களின் மேல்முறையீட்டு மனுக்கள் நிலுவையில் இருந்தபோது குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.சுரங்க ஒதுக்கீட்டில் ஊழல் மற்றும் குற்றச் சதியில் ஈடுபட்டதற்காக மதுகோடாவுக்கு விசாரணை நீதிமன்றம் 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.இந்நிலையில், ஜார்கண்ட் மாநிலத்தில் வரும் நவ.13 மற்றும் 20 ஆம் தேதி இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு ஏதுவாக,டில்லி உயர்நீதிமன்றத்தில், தனது தண்டனைக்கு தடை கோரி மனு அளித்திருந்தார். இன்று அவரது மனு விசாரணைக்கு வந்தது. இறுதி விசாரணையில், மனு தள்ளுபடி செய்யப்படுவதாக,நீதிபதி நீனா பன்சால் கிருஷ்ணா உத்தரவிட்டார்.இதனால், சட்டமன்ற தேர்தலில் முன்னாள் முதல்வர் மதுகோடா போட்டியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

M Ramachandran
அக் 18, 2024 20:25

பிள்ளை பூச்சி மண்ணுமோஹன சிங்கை பொம்மல் லாட்டம் போனால் ஆட வைத்து பெயர் ரிப்பேர் ஆக்கிடிச்சே ஒரு இத்தாலி அயலநாட்டு கும்பல் அந்த கேஸ் ஆ இது


M Ramachandran
அக் 18, 2024 20:21

மண்ணு இங்க்கை தார்குச்சியால் குத்தி ஊழல் நடந்ததாக பேச்சு வந்ததே அதுவா


J.V. Iyer
அக் 18, 2024 17:13

இந்த நீதி வழங்கிய நீதி அரசர்கள் வாழ்க.


புதிய வீடியோ