உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்தது; ஜார்க்கண்டில் 4 பேர் பலி; மீட்பு பணி தீவிரம்!

நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்தது; ஜார்க்கண்டில் 4 பேர் பலி; மீட்பு பணி தீவிரம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராஞ்சி: ஜார்க்கண்டில் சட்ட விரோதமாக செயல்பட்ட நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் மாயமாகி உள்ளதால் அவர்களைத் தேடும் பணி நடந்து வருகிறது.ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டத்தில் உள்ள கர்மா என்ற பகுதியில் நிலக்கரி சுரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது. சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்டோர் இதில் வேலை பார்க்கின்றனர். இந்த நிலக்கரி சுரங்கத்தில் இன்று வழக்கம் போல் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். எதிர்பாராத விதமாக சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=yx1740s2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அங்கிருந்த தொழிலாளர்கள், கிராம மக்கள் சேர்ந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மீட்புப் படையினரும் விரைந்து வந்தனர். இடிபாடுகளுக்குள் இருந்து தொழிலாளர்கள் நான்கு பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் இடிபாடுகளில், சிக்கி உள்ளதால் அவர்களை மீட்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என மீட்புப்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த நிலக்கரி சுரங்கம் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்தது விசாரணையில் அம்பலமானது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

ஆரூர் ரங்
ஜூலை 06, 2025 11:46

கட்டுப்படியாகாது என அரசால் கைவிடப்பட்ட (பழைய சுரங்க) இடத்தில் திருட்டுத்தனமாக எலிவளை போன்ற சுரங்கங்களை தோண்டி நிலக்கரி எடுக்க முயற்சி செய்துள்ளனர். திருடர்களுக்காக சற்றும் இரக்கப்படக் கூடாது.


அப்பாவி
ஜூலை 06, 2025 08:20

படுபாவிங்களா... நாலு பேர் செத்தாதான் விசாரணை நடத்தி அது சட்ட விரோதமா செயல்பட்டதுன்னு கண்டு பிடிப்பீங்களா? கேவலமா இருக்கு.


Ganapathy
ஜூலை 05, 2025 20:41

மத்திய நிலக்கரி சுரங்க நிறுனத்திற்கு சொந்தமான சுரங்கங்கள் மட்டுமே அங்கு உள்ள நிலையில் இது உள்ளூர் அரசியலின் புதிய ஊழலுக்கு வித்திட்டுள்ளது.


SANKAR
ஜூலை 05, 2025 19:19

coal mines under COAL INDIA a Central Govt owned PSU


ஆரூர் ரங்
ஜூலை 05, 2025 21:37

சொந்த நிலங்களில் அரசுக்குத் தெரியாமல் சிறிய சுரங்கம் அமைத்து நிலக்கரி எடுப்பது வெகு காலமாக கிழ‌க்கு வடகிழக்கு மாநிலங்களில் நடக்கிறது. இதற்கும் கோல் இந்தியா நிறுவனத்துக்கும் சம்பந்தமில்லை. ஜார்க்கண்ட்டில் யாரது ஆட்சி நடக்கிறது என்பது தெரியுமா?. காங்கிரஸ் கூட்டணி.


SANKAR
ஜூலை 05, 2025 19:16

arur rung any comment?


சமீபத்திய செய்தி