உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒத்துழைப்பு தேவை!

ஒத்துழைப்பு தேவை!

வங்கதேசத்தில் அரசியல் குழப்பம் நிலவுகிறது. இதனால் அந்நாட்டுடன் எல்லையை பகிரும் மேற்கு வங்கம் மற்ற மாநிலங்களுடனும், எல்லை பாதுகாப்பு படையினருடனும் ஒத்துழைப்பு தந்து சட்டவிரோதமாக ஊடுருவும் நபர்களை தடுத்து நிறுத்த உதவ வேண்டும். ஹிமந்த பிஸ்வ சர்மா, அசாம் முதல்வர், பா.ஜ.,

தியாகத்துக்கு இடமில்லை!

மஹாராஷ்டிராவில் மஹா விகாஸ் அகாடி கூட்டணியில் இருக்கவே நாங்கள் முயற்சிக்கிறோம். அவர்கள் எங்களை புறக்கணித்தால், எங்களுக்கு எங்கு அதிக ஓட்டுகள் கிடைக்குமோ, எங்கு கட்சி கட்டமைப்பு வலுவாக உள்ளதோ அந்த இடங்களில் போட்டியிடுவோம். அரசியலில் தியாகத்துக்கு இடமில்லை.அகிலேஷ் யாதவ், தலைவர், சமாஜ்வாதி

துரோகம் செய்தவர்!

என் அண்ணன் ஜெகன்மோகன் ரெட்டி கட்சி துவங்கிய போது, அவருடன் இணைந்து கட்சிக்காக நானும், என் தாயும் கடுமையாக உழைத்தோம். ஆனால், அவர் முதல்வர் ஆனதும் எங்களை ஒதுக்கி வைத்துவிட்டார். தற்போது குடும்ப சொத்து தொடர்பாக என்னை நீதிமன்றத்துக்கு இழுத்து துரோகம் செய்துள்ளார்.ஷர்மிளா, தலைவர், ஆந்திர மாநில காங்கிரஸ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !