வாசகர்கள் கருத்துகள் ( 2 )
வாஷிங்டனில் அமெரிக்க அதிபா் டிரம்ப்புடன் பிரதமா் மோடி மேற்கொண்ட பேச்சுவாா்த்தையில், இருதரப்பு வரத்தக உறவை மேம்படுத்துவது குறித்து மட்டுமின்றி, உயா்கல்வியில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் ஆலோசனை மேற்கொண்டதாகக் கூறப்பட்டது. அப்போது, ‘அமெரிக்க அதிபா் டிரம்ப் உடனான சந்திப்பு சிறப்பாக அமைந்தது. இரு நாடுகளிடையேயான நட்புறவில் இந்தப் பேச்சுவாா்த்தை குறிப்பிடத்தக்க தருணமாக அமையும்’ என்று பிரதமா் மோடி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இந்த நிலையில், அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி மற்றும் அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையே எவ்வித புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏதும் கையெழுத்தாகவில்லை என்று வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் பெறப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டம்RTI பதில் அளித்துள்ளது.
இந்தியா சுற்றுலாத்துறை மேன்மை அடைய திரு மோடி அவர்கள் அரும்பாடு படுகிறார் அவருக்கு நாம் உறுதுணையாக இருப்போம். அப்படியே மருத்துவத்துறையில் ஏழை மக்களுக்கு அரசு மருத்துவ மனையில் அனைத்துவிதமான சிறந்த மருத்துவம் கிடைக்க உறுதி செய்தால் நன்றாக இருக்கும்