உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வணிக பயன்பாட்டுக்கான சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.58 குறைப்பு!

வணிக பயன்பாட்டுக்கான சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.58 குறைப்பு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: வணிக பயன்பாட்டுக்கான சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.58 குறைக்கப்பட்டுள்ளது.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலைகள் போன்று சமையல் காஸ் சிலிண்டர் விலையும் நிர்ணயம் செய்யப்படுகிறது. மாதம் தோறும் முதல் நாளில் இந்த விலைகள் நிர்ணயிக்கப்படுவது வழக்கம்.அண்மைக்காலமாக காஸ் சிலிண்டர் விலை நிர்ணயத்தில் ஏற்ற, இறக்கங்கள் நிலவி வந்தன. இந் நிலையில், ஜூலை 1ம் தேதியான இன்று காஸ் சிலிண்டர் விலைகளில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன.அதன்படி, வணிக பயன்பாட்டுக்கான காஸ் சிலிண்டர் விலையில் ரூ.58 குறைக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றன. கடந்த மாதம் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாடு காஸ் சிலிண்டர் விலை சென்னையில் ரூ.1881 ஆக இருந்தது. தற்போது அதில் ரூ.58 குறைக்கப்பட்டு ரூ. 1822 என விற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் பயன்படுத்தப்படும் சிலிண்டர் விலை எந்த மாற்றமும் இல்லை. 14.2 எடை கொண்ட சிலிண்டர் ரூ.868.50 என்றே உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

SUBRAMANIAN P
ஜூலை 01, 2025 14:33

வீட்டு உபயோக சிலிண்டர் விலை குறைத்தால் ஏழைகள் நடுத்தரவர்க்கம் பயனடையும்.. வியாபாரம் செய்து பணம் சம்பாதிக்கும் வணிக சிலிண்டர் விலையை குறைக்குறீங்களே உங்களுக்கெல்லாம் இருக்கிறதா?


Kjp
ஜூலை 01, 2025 09:08

சிலிண்டர் விலை கூடினால் கம்யூக்கள் ஆ ஊ என்று ஆடுவார்கள் குறைத்துவிட்டால் மூச்சு பேச்சு வராது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை