உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தில் விரைவில் வர்த்தக சேவை

நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தில் விரைவில் வர்த்தக சேவை

மும்பை: வரும் ஏப்ரலில் நவி மும்பை விமான நிலையம், வணிக ரீதியிலான சேவையை தொடங்குகிறது.இன்று இண்டிகோ ஏ320 பயணிகள் விமானம் கட்டுமானத்தில் உள்ள நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் வெற்றிகரமாக தரையிறங்கியது.மும்பையில் விமான சேவை குறித்து,அதானி ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ் லிமிடெட்டின் தலைமைச் செயல் அதிகாரி அருண் பன்சால் கூறியதாவது:நவி மும்பை சர்வதேச விமான நிலையம் அடுத்த நிதியாண்டின் தொடக்கத்தில் இருந்து செயல்படத் தொடங்கும் என்று கணித்துள்ளோம்.இன்று அதற்கான சோதனையை வெற்றிகரமாக முடித்துள்ளோம்.நவி மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு இது ஒரு முக்கியமான நாள்.இது வணிக நடவடிக்கைகளைத் தொடங்க தேவையான ஏரோட்ரோம் உரிமத்தைப் பெறுவதற்கான ஒரு முக்கியமான படியாகும்.ஏப்ரல் 17ம் தேதிக்குள் விமான நிலையத்தின் வணிகச் செயல்பாடுகளைத் தொடங்குவதே எங்கள் லட்சியம்.ஜூலை இறுதிக்குள் சர்வதேச விமான சேவை தொடங்கும்.இவ்வாறு அருண் பன்சால் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை